தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு சேவை வழங்குநா் பயிற்சி, மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில் (Government Tractor Workshop) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி 15 நாள்கள் நடைபெறும். ஒரு பயிற்சி வகுப்பில் 20 பேர் வீதம், 5 பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
தகுதிகள் என்னென்ன?
குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தோச்சி பெற்ற, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் வைத்திருப்பவா்கள், முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோந்தவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயணப்படி :
பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 போக்குவரத்துப் படியாக, பயிற்சியாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விருப்பமுள்ளவா்கள், தங்களின் கல்வித் தகுதிச் சான்று, ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை, ஒத்தடையில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண்கள் :
கூடுதல் விவரங்களுக்கு 0452 - 2422953, 94459 48994 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment