உஷார்..! டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் மூலம் வரும் ஆபத்து..! - Agri Info

Adding Green to your Life

February 16, 2023

உஷார்..! டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் மூலம் வரும் ஆபத்து..!

 டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்ஃபோனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள். இப்படித்தான் சீனாவில் மணிக்கணக்கில் செல்ஃபோன் பயன்படுத்தியதில் அவரின் குடலே வெளியே வந்துவிட்டதாக செய்திகள் வைரலாகப் பரவின.

இந்நிலையில் இந்த ஆய்வு நிச்சயம் பலரையும் விழிப்படையச் செய்யும். நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது என்று விவரிக்கிறார் ஆய்வின் மருத்துவர் ஜார்விஸ்.

பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும்.

மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூலத்தை உண்டாக்கும் என்கிறது ஆய்வு. இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இன்று செல்ஃபோன்களால் மட்டுமல்ல. இதற்கு முன் பிடித்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது.

மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை பட்டியலிட்டுள்ளனர்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்ஃபோன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment