முந்திரி பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் காப்பர் போன்ற பல அத்தியாவசிய மினரல்ஸ் நிறைந்திருப்பதால் அவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. தவிர முந்திரியில் வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் தியாமின் (thiamine) நிறைந்திருப்பதால் தினமும் இவற்றை சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பொதுவாகவே முந்திரியை இனிப்புகளில் சேர்த்துக்கொள்வார்கள். சில சமயங்களில் கிரேவிக்களிலும் சேர்த்து கொள்கிறார்கள். இதுவரை அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம்களை ஊறவைத்து சாப்பிடுவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முந்திரியையும் ஊற வைத்தது சாப்பிடலாம் என்பது தெரியுமா..? பாலில் ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
முதல் நாள் இரவு ஒரு கிளாஸ் பாலில் 3 - 5 முந்திரிகளை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை முந்திரியை பாலில் நன்கு வேக வைக்கவும். வேக வைத்த பின் அடுப்பை அணைத்து விட்டு பாலில் இருக்கும் முந்திரியை மென்று சாப்பிட்டு பாலையும் குடித்து விடுங்கள். அதிகபட்சம் 5 முந்திரிகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். பால், முந்திரி இரண்டிலுமே கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதால் எடையை அதிகரிக்க கூடும். எனவே மிதமான அளவு முந்திரி எடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
உறுதியான எலும்புகள் : இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரி பருப்புகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலுவடையும். பாலில் கால்சியம் சத்து அதிகம் என்பது நமக்கு தெரிந்ததே. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அனைத்தும் எலும்புகளை வலுவாக்கும், மேலும் மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரும். வயதானவர்கள் தங்களுக்கு மூட்டு மற்றும் எலும்பு வலி வராமல் இருக்க முந்திரிகளை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
மலச்சிக்கலை போக்குகிறது : தற்போதைய காலகட்டத்தில் மலச்சிக்கல் மிக பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடலாம். முந்திரியில் காணப்படும் ஃபைபர் சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும். இரவில் முந்திரிகளை பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் வயிறு எளிதில் சுத்தமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : பாலில் ஊறவைத்த முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எப்படி என்றால் பால் மற்றும் முந்திரி என இரண்டிலுமே ஏராளமான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவற்றை சேர்த்து சாப்பிடும் போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாலில் ஊறவைத்த முந்திரி சாப்பிடுவது நோய்களை எளிதில் அண்டாமல் பார்த்து கொள்ளும்.
ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து பாதுகாப்பு : முந்திரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் காணப்படுகின்றன. எனவே பாலில் ஊறவைத்த முந்திரிகளை தினசரி சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அழிக்கும். இதனால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் நம் உடல் காப்பாற்றப்படும். உடலையும், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் பாலில் ஊற வைத்த முந்திரியை தினசரி உட்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment