காய்ச்சல் இருக்கா..? நிமோனியாவா இருக்கலாம்.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..! - Agri Info

Adding Green to your Life

February 26, 2023

காய்ச்சல் இருக்கா..? நிமோனியாவா இருக்கலாம்.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

 இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய்களையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றான நிமோனியா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

 உலக சுகாதார நிறுவன தகவலின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவில் உயரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நோயின் தாக்கம் மற்றும் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் ஆண்டு உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைக்கு நாம் நிமோனியா பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…



நிமோனியா என்றால் என்ன? 
நுரையிரல் செல்களில் ஏற்படும் அழற்சி தான் நிமோனியா என்றழைக்கப்படுகிறது. பொதுவாக நம்முடைய நுரையீரலில் அல்வியோலி என்றழைக்கப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் உள்ளன. இவை பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் போது நிமோனியா உண்டாகிறது.

நிமோனியாவின் அறிகுறிகள்: 
காய்ச்சல், குளிர், மூச்சுத்திணறல், சுவாசிக்கும் போது மார்பு வலி, அதிகப்படியான இதய துடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல், இருமல், வயிறு எரிச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன.இதுப்போன்ற அறிகுறிகள் நிமோனியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளாக அமைகிறது என்றாலும், கீழ்வரும் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதோ அதன் விபரம்..

சளியுடன் கூடிய காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவை நீங்கள் சந்திக்க நேரிடும்.நாம் தினமும் செய்யக்கூடிய பணிகளை செய்யும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டவுன் மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சு விடும் போது நெஞ்சு வலி, சளி அல்லது காய்ச்சல் குணமடைந்த பின்னரும் திடீரென உடல் நிலை மோசமடைதல், இதய நோய், நீரழிவு அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நோய் கண்டறிதல் விதம் : மேற்கூறியுள்ள அறிகுறிகள் எதுவும் இருந்தால், உடனடியாக உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மூலம் கண்டறிப்படுகிறது. மேலும் இரத்த பரிசோதனை, சளி பரிசோதனையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதோடு சில நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரான்கோஸ்கோபியும் தேவைப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

சிகிச்சை : நிமோனியா பாதிப்பு உங்களது ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் மருத்து பரிசோதனை மூலம் கண்டறிந்து விட்டீர்கள் என்றால்? வீட்டிலேயே நீங்கள் வாழ்வழி நுண்ணுயிர் எதிரப்பிகளுடன் கூடிய சிகிச்சைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும் ஆண்டிபயாடிக் சிகிச்சையின் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் மேம்படத் தொடங்குகிறார்கள்.ஒருவேளை நோயின் தாக்கம் தீவிரமாகும் பட்சத்தில், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள் : நிமோனியா மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். நிமோகாக்கல் தடுப்பூசி மற்றும் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி ஆகியவை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் ஆகும்.புகைபிடிப்பதை நிறுத்துவது நிமோனியாவைத் தடுக்க ஒரு முக்கியமான படியாகும். தொற்றுகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். மேலும் நிமோனியா அறிகுறி உள்ளவர்கள் இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment