உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை... எதில் ஆரோக்கியம் அதிகம்..? - Agri Info

Adding Green to your Life

February 24, 2023

உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை... எதில் ஆரோக்கியம் அதிகம்..?

 கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை இரண்டின் உலர வைத்த பதம்தான் உலர் திராட்சை என்கிறோம். கருப்பு உலர் திராட்சை , தங்க நிற அல்லது மஞ்சள் நிற உலர் திராட்சை என இரண்டு உள்ளது. இதில் மஞ்சள் நிற உலர் திராட்சை விசேஷ நாட்களில் இனிப்பு வகைகளில் சேர்ப்பதுண்டு. கருப்பு திராட்சை ஊட்டச்சத்திற்காக சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டில் எதை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. உங்களை தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

எது சிறந்தது..? : பொதுவாக இரண்டு திராட்சையிலும் ஆரோக்கியம் , ஊட்டச்சத்து என்பது சம அளவிலேயே உள்ளது. ஆனால் கலோரியில் மட்டுமே இரண்டும் வித்தியாசப்படுகிறது. அதாவது கால் கப் மஞ்சள் நிற திராட்சையில் 130 கலோரிகள் அடங்கியுள்ளது. கருப்பு திராட்சையில் 120 கலோரிகள் அடங்கியுள்ளது. இரண்டிலும் இனிப்பு சுவை அதாவது சர்க்கரை 29 கிராம் அடங்கியுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது.

இந்த இரண்டு திராட்சைகளையும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, இரத்த சோகை, காய்ச்சல் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் என பல பிரச்னைகளுக்கு உதவுகிறது.

இருப்பினும் கருப்பு திராட்சையையே வல்லுநர்கள் , மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் ஆரோக்கியமான வழியில் எடை அதிகரிக்க கருப்பு திராட்சை உதவுகிறது. அத்துடன் கண் ஆரோக்கியம், பல் பராமரிப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் கருப்பு திராட்சையை சாப்பிடலாம். கருப்பு திராட்சையை நேரடியாக அல்லாமல் இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டால் அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறலாம்.

உலர் திராட்சையில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும், இதயத்தின் செயல்பாடுகளுக்கும் நல்ல பலன் தருகிறது. அதோடு நார்ச்சத்து நிறைந்திருப்பது கூடுதல் சிறப்பு..

2013 ஆண்டு Journal of Food Science-இல் வெளியான தகவலில் திராட்சை நீரிழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயங்களை தவிர்க்க உதவுகிறது என்று கூறியுள்ளது. இருப்பினும், திராட்சையில் அதிக கலோரிகள் இருப்பதால், நீங்கள் ஆரோக்கியமான எடையை அடைய அல்லது பராமரிக்க விரும்பினால் அவற்றை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip



No comments:

Post a Comment