தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான். தற்போதையக் காலகட்டத்தில் பிரபலமான உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய அளவில் தொடங்கிப் போராடி உலகளவில் சாதனைப் படைத்தவர்கள்தான். அந்த அளவிற்கு உணவு தொழில்களுக்கான சந்தை அதிகமாக இருக்கிறது.
அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது. முதல் கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். சிறிய முதலீட்டில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் தரும் தொழில் இது. செலவிடும் நேரம், முதலீடு மற்றும் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறலாம். குறிப்பாக தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படாமல் தினமும் லாபம் பார்க்கலாம். இட்லி தோசை மாவு தொழில் தொடங்க தேவையான விவரங்களைப் பார்க்கலாம்.
இட்லி தோசை மாவு தொழில் தொடங்குவது எப்படி? நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். உங்கள் ஏரியாவில் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இட்லி தோசை மாவு அரைத்து கடைகளில் சப்ளை செய்ய அல்லது பெரிய சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலீடு : குறைந்தளவு முதலீடு என்றால் சுமார் 2 இருந்து 3 லட்சம் வரை ஆகும். வியாபாரம் என்றால் அதற்கு ஏற்ற வேகம் தேவை. அதற்காக மாவு அரைக்க Instant Wet Grinder என்ற இயந்திரத்தை வாங்க வேண்டும். இந்த இயந்திரம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை வரும். அதனைத் தொடர்ந்து, சில பாத்திரங்கள் வாங்க வேண்டும். இது இல்லாமல் தின அரிசி, உளுந்து போன்ற பொருட்கள் வாங்க வேண்டும். மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.
தொழிலைப் பதிவு செய்வது எப்படி? இட்லி தோசை மாவு அரைக்கும் தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்குவதால் சிறுதொழில்களில் இடம்பெறும். எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அடிப்படையில் வழங்கப்படும் Udyog Aadhar சான்றிதழைப் பதிவு செய்து பெற வேண்டும். தொடர்ந்து, உங்கள் பகுதி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கைத்தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் லைசென்ஸ் பெறவேண்டும். மேலும் தொழில் வரி செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.இது எல்லாம் இல்லாமல் GST வரிக்குப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க உதவும்.
வங்கிக் கடன் வாங்குவது எப்படி? MSME பதிவாக நீங்கள் வாங்கும் Udyog Aadhar சான்றிதழ் இருப்பதால் வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிமையானது. தொழில்முனைவோர்களுக்கான வங்கிக் கடன்களில் இருக்கின்ற சலுகைகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மேல் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்று உள்ளீர்கள் என்றால் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தி பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
இட்லி தோசை மாவு தாயார் செய்வது எப்படி? வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்குத் தரமும் மிகவும் முக்கியம். அதனால் தரமான இட்லி அரிசி, உளுந்தைப் பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம்.
அரைக்கும் முறை : 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும். அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.
பேக்கிங் முறை : அரைந்த மாவை பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. தரமான அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கவர்களை பயன்படுத்த வேண்டும். உணவு காலாவதியாகும் நேரம், உற்பத்தி செய்யப்பட்ட நேரம் போன்றவற்றை பேக்கிங் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண Sealing Machine இயந்திரத்தை பேக்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
விநியோக்கிக்கும் முறை : தாயாராக உள்ள மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம். பெரிய அளவிலான சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
லாபம் : ஒரு நாளைக்கு 2,000 ஆயிரம் வரை செலவு செய்தால் சுமார் 4,000 முதல் 5,000 வரை லாபம் பெறலாம். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.
No comments:
Post a Comment