"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம். அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.
விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம். இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.
தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.
No comments:
Post a Comment