இந்தியர்களின் சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது இஞ்சி. நம் முன்னோர்கள் காலங்காலமாக பல்வேறு மருத்துவ குணங்களுக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு இஞ்சி மிஞ்ச்குந்த பயனுள்ளதாக உள்ளது.
நாம் இஞ்சியை பிரெஷாகவும், காய வைத்து சுக்குவாகவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இரு முறைகளில் நாம் இஞ்சியைப் பயன்படுத்தினாலும் எது நமக்கு கூடுதல் ஆரோக்கியம் அளிக்கும் என்பதை நாம் ஒருபோதும் யோசித்திருப்பதில்லை. இந்நிலையில் தான் இதுக்குறித்து ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோன், இஞ்சியை விட சுக்கு தான் நமக்கு உடலுக்கு சிறந்து என்கிறார். இன்ஸ்டாவில் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
சுக்குவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:
வாயு பிரச்சனைக்குத் தீர்வு: நாம் இஞ்சியை பிரஸ்ஸாக சாப்பிடும் போது வாயு பிரச்சனை அதிகமாகும். எனவே தான் உலர் இஞ்சியை அதாவது சுக்குவை நாம் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். சுக்குவை இடித்து பொடியாக்கி சுடு தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம் அல்லது டீ-யாக செய்து சாப்பிடலாம். நிச்சயம் வாயு பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
மலச்சிக்கலுக்குத் தீர்வு: சுக்கு அதவாது உலர் இஞ்சி என்பது மலமிளக்கியாக உள்ளது. வயிறு மந்த தன்மை மற்றும் மலச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், சிறிதளவு சுக்குவை சுடு தண்ணீரில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
மூட்டுவலிக்குத் தீர்வு: மூட்டுவலி பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக உள்ள நிலையில், இதைக் குணப்படுத்த சுக்குவை நீங்கள் பயன்படுத்தலாம். சுக்குவை பொடியாக அரைத்துக் கொண்டு வலி உள்ள இடங்களில் பூசி வர மூட்டு வலி முழுமையாக குணமாகும். இவ்வாறு வாரத்திற்கு 2 நாள் அல்லது 3 நாள்கள் செய்தால் வலி சுத்தமாக இல்லாமல் போய்விடும்.
சளியைக்குறைத்தல்: பருவ காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு நாம் சுக்குவை உபயோகிக்கலாம். சுவாசக்குழாய் கோளாறுகளை சமாளிக்கவும் சுக்கு நமக்கு உதவியாக உள்ளது.
இதோடு மட்டுமின்றி தலைவலி, வாய் துர்நாற்றம், வயிறு எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சுக்கு மிகுந்த பலனளிப்பதாக உள்ளது. எனவே நீங்கள் தினமும் உங்களது உணவு முறையில் தவறாமல் சுக்குவை நீங்கள் சேர்த்துக் கொள்ளும்போது பல விதமான உடல் நலப்பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு காணமுடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment