அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கோச்சிங்: தாட்கோ அறிவிப்பு - Agri Info

Adding Green to your Life

February 27, 2023

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கோச்சிங்: தாட்கோ அறிவிப்பு

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2023 ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு (SSC MTC - 2023), 2023 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL), 2023 ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) (CHSL (10+2) Examination, இளநிலை பொறியாளர் (SSC JE) உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான போட்டித்  தேர்வுகளை மத்திய அரசுப்  பணியாளர் நடப்பு ஆண்டில் அறிவிக்க வருகிறது.

எஸ்எஸ்சி வெளியிட்ட தேர்வு திட்ட அட்டவணையின் படி, 2023 Multi Tasking non technical staff தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிடப்படும். ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நிலை - I தேர்வு நடைபெறும்.

TAHDCO Exam training courses
தாட்கோ தேர்வு பயிற்சித் திட்டம்

மேலும், SSC CGL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக மே 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலை - I தேர்வு ஜூன்/ஜுலை மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அதே போன்று, SSC CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜுலை/ஆகஸ்ட் மாதங்களில் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கிறது.

எனவே, இந்த தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பயிற்சிக்கான மொத்த செலவுகளையும் தாட்கோ நிறுவனம் ஏற்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment