எந்த விஷயத்திலும் சரியா கவனம் செலுத்த முடியலையா..? இதை செய்யுங்க.! - Agri Info

Adding Green to your Life

February 6, 2023

எந்த விஷயத்திலும் சரியா கவனம் செலுத்த முடியலையா..? இதை செய்யுங்க.!

 ஒரு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்த முயற்சிக்கும் போது, நமக்கு கவனச்சிதறல் ஏற்படும். அட நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தில் ஏன் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை என யோசிப்போம்.கவனச்சிதறல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலருக்கு இது சாதாரண விஷயமாகவும் இருக்கலாம்.

ஆனால், கவனச்சிதறல் அதிகமாக இருந்தால், அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் உங்களை நீங்கள் மேம்படுத்த சில உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம். இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் நாம் பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலோர், உணர்ச்சி ரீதியில் சோர்வாக இருக்கும்போது, ​​நாம் செய்ய வேண்டிய விஷயங்களை கடைசி நிமிடம் வரை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிபோடுவோம். மனதளவில் நாம் ஆரோக்கியமாக இல்லை என்றால், பணிகளில் கவனம் செலுத்துவது கடினம்.

ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்வதும் கவனச்சிதறலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். அதாவது, ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்ய முயற்சிப்பது, மற்ற வேளைகளில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கான காரணம். இதனால், அதீத பணிச்சுமையை நீங்கள் உணர நேரிடும். இதனால், உங்கள் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இது தவிர, ஹைபராக்டிவிட்டி கோளாறால் (ADHD) பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவு பிரச்னையை எதிர்கொள்வார்கள். இவர்கள் எளிதில் மற்ற விஷயத்தால் திசைதிருப்பப்படுவார்கள்.

நீங்கள் வேலை செய்யும் போதோ அல்லது படிக்கும் போதோ உங்கள் கவனம் சிதறினால், ஒரு காகிதத்தை எடுத்து குறிப்புகளை எடுக்க முயற்சிக்கவும். அந்த குறிப்பை உங்கள் கைகளால் எழுதவும். இப்படி செய்வது நம்மை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். இதனால், நீங்க செய்யும் பணியில் முழு கவனத்தையம் செலுத்த முடியும்.

ஒருவர் தனது உடலுக்கும், மனதிற்கும் 6 முதல் 7 மணிநேரம் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூக்கம் அவசியம். உங்கள் மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்த தூக்கம் முக்கியமானது.

நீங்கள் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும். சத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில் நாம் வேலை அல்லது படித்தால் நமது ஆர்வம் குறையத்துவங்கும். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொது நாம் மட்டும் இப்படு இருக்கிறோமே என நினைக்க தூண்டும். எனவே, வெளிச்சம் உள்ள சுத்தமான மற்றும் நேர்த்தியான சூழல் நமது வேலையில் சரியாக கவனம் செலுத்த உதவும். இவை உங்களுக்கு பலன் கொடுக்க வில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment