இன்றைய நிலையில் சரியான வேலை கிடைப்பது என்பது அனைவருக்கும் மிகவும் கடினமான காரியமாக இருந்து வருகிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அவை நமக்கு பிடித்தமானதாக உள்ளதா, அதில் போதுமான அளவு வருமானம் வருகிறதா என்பது போன்ற பல பிரச்சனைகள் நம் மனதை போட்டு குடைந்து கொண்டிருக்கும். முக்கியமாக இளம் வயதினர் பலரும் வேலை கிடைத்த பின்னரும் கூட பல விஷயங்களை தவறாக செய்து பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள். எனவே வேலை தேடும் பொழுதும் வேலைக்கு செல்லும் போதும் இளம் வயதினர் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
போதுமான அளவு தொடர்புகளை வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல் : வேலை தேடும் அல்லது வேலைக்குச் செல்லும் அனைவரும் தனக்கென ஒரு நெட்வொர்க்கை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். நீங்களே முயற்சி செய்து பல்வேறு துறைகளில் உள்ள நபர்களுடன் தொடர்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்திலும் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும்.
வேலையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பது :
இளம் வயதினர் பலரும் தங்களது வேலை பற்றி மிகவும் கடினமான கொள்கைகளை பின்பற்றுகின்றனர். தாங்கள் படித்த படிப்புக்கு தான் வேலை வேண்டும். இந்த துறையில் மட்டும் தான் வேலை செய்வேன் என்பது போன்ற பல்வேறு விதமான எல்லைகளை வகுத்துக் கொண்டு அதன் வழியே நடக்க முயற்சி செய்கின்றனர். உண்மையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் வேலையை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் நாம் ஆசைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அதிகம் கற்று கொள்ளாமல் இருத்தல் : எப்போதுமே புதிய புதிய திறமைகளை கற்றுக் கொண்டும், தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொண்டும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் புதிய சவால்களையும் பல்வேறு வித சூழ்நிலைகளையும் சந்திக்க நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு சேமிக்காமல் இருப்பது : 20-களின் துவக்கத்தில் தான் நாம் நமது எதிர்காலத்திற்கான சேமிப்புகளை மேற்கொள்ள மிகவும் சரியான நேரம் ஆகும். மேலும் நம்முடைய ஓய்வு காலங்களின் போது நமக்கு போதுமான அளவு சேமிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. இதனைத் தவிர உங்களுக்கென புது வங்கி கணக்கு துவங்கி அவசர காலத்திற்கும் நிதியை சேமித்து வைக்க வேண்டும். இதை தவிர காப்பீடுகள் போன்ற மற்ற விஷயங்களிலும் சேமிப்புகளை மேற்கொள்வது அவசியம்.
குறுகிய கால இலக்குகளில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது : குறுகிய கால இலக்குகளை உண்டாக்கிக் கொண்டு அதனை நோக்கி செயல்படுவது முக்கியமானது என்றாலும் எப்போதுமே அதில் முழு கவனத்தையும் கொண்டு செயல்படுவது என்பது சரியாக வராது. நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து அதற்கான செயல்களை செய்து நகரும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் :
அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறக் கூடாது. மேலும் உங்களது இலக்குகளை மனதில் வைத்து அதற்கு ஏற்ப செயல்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி அதன் மூலம் உங்களது திறமைகளையும் உங்களது மதிப்பையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment