Search

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

 வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

 வைட்டமின் 'டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் 'டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம். நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. 

வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். 

அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும். நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் 'டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். 

மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் 'டி' தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் 'டி'யை பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் இருப்பதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment