நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது பணிகளில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், புதிதாக ஒன்றை முயற்சி செய்யவதற்கு தயக்கம் தேவை இல்லை. மகிழ்ச்சியற்ற தொழில் வாழ்க்கையை தொடர்ந்து இருப்பது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் கடினமாக மாற்றுகிறது.
எனவே மக்கள் பல காரணங்களுக்காக தங்கள் தொழில் வாழ்க்கையை மாற்ற முற்படுகிறார்கள். இதற்கு குறிப்பிட்ட வேலையில் இணைத்துக் கொள்ள விரும்பும் புதிய ஆர்வங்களை ஒருவர் கண்டுபிடித்திருக்கலாம் அல்லது இப்போது இருக்கும் வேலையில் கிடைப்பதை விட இன்னும் அதிக பணம் சம்பாதிக்க விரும்புவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். நீங்களும் பலரை போல இந்த ஆண்டில் உங்கள் தொழில் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா.! இங்கே உங்களுக்கான சில முக்கிய டிப்ஸ்களை பார்க்கலாம்.
புதிய துறை பற்றி ஆராய்ச்சி : நீங்கள் மாற விரும்பும் புதிய ஃபீல்ட் பற்றி புரிந்து கொள்ள மற்றும் அந்த துறை அல்லது வேலையை பற்றிய அறிவை பெற ரிசர்ச் மிகவும் முக்கியம். எனவே நீங்கள் புதிதாக நுழைய விரும்பும் தொழில் துறையில் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்துங்கள். அந்த துறையில் இருக்கும் வேலை தேவைகள் மற்றும் அதில் நுழைய உங்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளுங்கள்.
நெட்ஒர்க் : நெட்வொர்க்கிங் என்பது உங்களுக்கு தேவைப்படும் துறைகளில் அறிவு, திறனை பெற மற்றும் உங்கள் புதிய கேரியரை உருவாக்க உதவும் பயனுள்ள நபர்களை சந்திப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் நுழைய விரும்பும் துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களுடன் கனெக்ட்டாக இருங்கள் மற்றும் உங்கள் நெட்வொர்க்கை உருவாக்க ஈவன்ட்ஸ் மற்றும் ஒர்க்ஷாப்களில் கலந்து கொள்ளுங்கள்.
ரெஸ்யூமை அப்டேட் செய்யுங்கள் : உங்கள் பழைய ரெஸ்யூமை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் அது நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை தராது. எனவே அப்டேட் செய்யப்பட்ட ரெஸ்யூமை ரெடி செய்து கொள்ளுங்கள். உங்கள் லிங்க்ட்இன் ப்ரொஃபைலையும் சேர்த்து அப்டேட் செய்ய மறக்காதீர்கள். ஏனெனில் இது உங்கள் ப்ரொஃபஷ்னல் ப்ரொஃபைலை மதிப்பிட ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு உதவும். குறிப்பாக உங்கள் ரெஸ்யூமில் நீங்கள் நுழைய விரும்பும் புதிய துறைக்கு ஏற்ப உங்களிடம் இருக்கும் திறன்களை குறிப்பிட்டு பாயிண்ட்ஸ்களை சேர்த்து கொள்ளுங்கள்.
தொடர்புடைய எக்ஸ்பீரியன்ஸ் : நீங்கள் புதிய துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அந்த துறை சார்ந்து உங்கள் திறன்களை வளர்த்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட துறை சார்ந்த கோர்ஸ்களை எடுத்து படிப்பது, சான்றிதழ்களை பெறுவது அல்லது குறிப்பிட்ட புதிய துறையில் வாலன்டியரிங் செய்வது உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.
நெகிழ்வாக இருங்கள் : நீங்கள் புதிய துறை அதே சமயம் உங்களுக்கு மிகவும் ஆர்வமான துறையில் வேலைக்காக நுழைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் உங்களது மைண்ட் செட்டை நெகிழ்வாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் நுழைய போகும் புதிய துறையில் உங்களது போஸ்ட்டிங் என்ட்ரி-லெவலாக இருக்கலாம் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பதை விட குறைந்த ஊதியம் கொடுக்கலாம். எனினும் நீங்கள் விரும்பி வேலைக்கு சேரும் குறிப்பிட்ட துறையில் சிறந்த அனுபவத்தை பெறவும் காலப்போக்கில் பெரிய அளவில் முன்னேறவும் உதவும். எனவே எதற்கும் தயாராக இருங்கள்.
நம்பிக்கை அவசியம் : உங்கள் கேரியரை மாற்றி கொள்ள விரும்பினால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான விஷயம் விடாமுயற்சியுடன் இருப்பது மற்றும் உங்கள் மீதும் உங்கள் திறன்கள் மீதும் முதலில் நம்பிக்கை கொள்வது. நெட்வொர்க்கிங்கில் கவனம் செலுத்துவது, கற்று கொள்வது மற்றும் உங்கள் புதிய துறையில் வாய்ப்புகளை தீவிரமாக தேடுவது உள்ளிட்டவையும் இருக்க வேண்டும். முயற்சிகளில் தோற்றால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிப்பது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.
No comments:
Post a Comment