Search

தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?

 தினமும் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்த பலரும் விரும்புவார்கள்.

அதுவும் குளிர் காலத்தில் காலை வேளையில் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால்தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.வெந்நீர்க் குளியல் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல் வலி நீங்குவதுடன் சளி இருமல் பிரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். வெந்நீரில் குளிக்கும்போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்துவிடும். உங்களுடைய சரும வகை சென்சிட்டிவ்வாக இருந்தால் நிச்சயம் வெந்நீரில் குளிக்கக் கூடாது. அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.

தூக்கத்தைக் கலைக்க வெந்நீர்க் குளியல்தான் சிறப்பு என்று நினைப்பது தவறு. குளிக்கும்போது சுகமாக இருக்கும். ஆனால், நாளடைவில் உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்துவிடும். தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமைத் தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும்.

சுடச்சுட தண்ணீரைத் தலையில் கொட்டிக் குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலமிழந்து அதிக அளவில் முடி கொட்டும். ஆண்களுக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிடும். மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் குளியல் சுகமாகத் தான் இருக்கும். அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும். அதன்பின் வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில்தான் குளிப்பார்கள். பழக்கம் காரணமாக இதைச் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. குளிர் காலத்தில் வெந்நீர் குளியல் என்றால் வெயில் காலத்தில் குளிர்ந்த நீர்க் குளியல் என மாறிக்கொள்ளலாம்.

நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளும்போது இரண்டு சொம்பு குளிர்ந்த நீரில் முதலில் குளியுங்கள். அதன்பின் அந்த குளிர்ச்சி உடலுக்குப் பழகிவிடும். முழுக் குளியலையும் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியாகும். சருமமும் பொலிவாகும். தலைமுடி உதிர்வும் இருக்காது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment