பற்களில் உள்ள எனாமல் என்பது பல்லின் வெளிப்புறம் அமைந்திருக்கும் உறை போன்றது. நம் உடலிலேயே மிகவும் கடினமான திசு எனாமல் ஆகும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. இந்தத் தாதுக்கள் குறையும்போது, எனாமல் தேய ஆரம்பிக்கிறது. ஈறுகளுக்கு வெளியே தெரியும் பல்லின் ஒரு பகுதியான கிரீடத்தை இந்த எனாமல் உள்ளடக்கி வைத்திருக்கும். எனாமல் என்பது பளபளப்பாக இருக்கும் என்பதால், அதன் மூலம் ஒளியைக் காணலாம்.
எனாமல் சேதமடைந்தால் என்ன ஆகும்? பல் எனாமல் வலி ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை மற்றும் வேதிப்பொருட்களிலிருந்து நம் பற்களை பாதுகாக்கிறது. நம் உடம்பில் எலும்புகள் உடைந்தால், அதனை எளிதாக சரி செய்து கொள்ளலாம். ஆனால் பற்கள் உடைந்தாலும், நொறுங்கினாலும் அதனை மீண்டும் வளர செய்ய முடியாது. எனவே எனாமல் பற்களை பாதுகாப்பதில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பற்களில் எனாமல் சேதமடைந்தால், குழந்தைகளுக்கு பற்சொத்தை, சூடான அல்லது குளிர்ந்த பொருட்களை உட்கொண்டால் பற்கூச்சம், பற்களில் தொற்று ஆகியவை ஏற்படலாம். இப்போதெல்லாம், பற்சிதைவு என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். எனவே உங்கள் பிள்ளையின் உணவு பல் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். எனாமலுக்கு இடையூறு ஏற்படுத்தும் பல்வேறு உணவுப் பழக்கங்கள், வாய்வழி பராமரிப்பு மற்றும் பிற காரணிகள் குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகளின் பற்களை பராமரிக்கும் வழிமுறைகள் : குழந்தைகளின் பற்களில் பற்களில் உள்ள எனாமல் வளர்ச்சி நிலையில் இருக்கும். பெரியவர்களை விட மெல்லியதாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாய்வழி பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டுயது அவசியம். குழந்தைகளின் வாயை முறையாக பராமரிப்பது மூலம் எனாமல் வலுவடைந்து பற்கள் உடைவது தடுக்கப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் கூட ஈறுகளில் ஏற்படக் கூடிய நோயைத் தடுக்க இது அவசியமாகிறது.
நாள் முழுவதும் தின்பண்டங்கள் உட்கொள்வது பற்களின் சிதைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சர்க்கரை மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பற்கள் பாதிக்கப்படலாம். இது போன்ற பொருட்களை சாப்பிட்ட பிறகு சில மணி நேரம் வாயில் அதிகமாக அமிலம் சுரக்கும். எனவே தின்பண்டங்களை உட்கொண்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். மேலும் அதிகப்படியான மிட்டாய்கள் அல்லது சர்க்கரை கலந்த உணவு, உட்கொள்வதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குழந்தைகளுக்கு Fluoride ஃபுளூரைட் இல்லாத டூத் பேஸ்டுகளை கொண்டு பல்துலக்குவதன் மூலம் அவர்களின் பற்களில் எனாமல் தேய்மானம் அடையாது. சில சமயங்களில் குழந்தைகள் பேஸ்டை விழுங்குவிடுவார்கள். எனவே இது உடல்நலனில் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே குறைந்தது 6 வயது வரை அவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஃபுளூரைட் இல்லாததாக இருத்தல் நல்லது.
சாப்பிட்ட பிறகு பற்களில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இது எனாமலை அரித்து துவாரங்களை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குவது அவசியம். உங்கள் பிள்ளையை சரியான வாய்வழிப் பராமரிப்பினை பழக்கப்படுத்துவது மூலம், நீங்கள் அவர்களின் பற்களை, உணவுத் துகள்கள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கலாம்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் டூத் பிரஷ் என்பது பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யாது. குறிப்பாக, பற்களுக்கு இடையே உள்ள சின்னஞ்சிறு இடைவெளியில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்ளும். எனவே பெரும்பாலான பல் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு மென்மையான அல்லது கூடுதல் மென்மையான பிரஷ்களை பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் உணவுத் துகள்கள் எளிதில் வெளியேற்றப்படுவதுடன், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக அமைகிறது.
No comments:
Post a Comment