புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்த தீய பழக்கம் மூளை ஆரோக்கியத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
நமது உடல் உடலை போலவே நமது மூளைக்கும் இயற்கையாகவே வயதாகும் மற்றும் முதுமை அடையும். அதே வேளையில் இது ஒரு குறிப்பிட்ட வயது வரை நடக்க தொடங்குவதில்லை. ஒருவரின் மரபணு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளை பொறுத்து மூளை முதுமையடையும். ஆனால் புகைபழக்கம் என்பது ஒருவரின் மூளையை இயல்பை விட வேகமாக வயதாக்கும் ஒரு சுற்றுச்சூழல் காரணியாக இருக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆபத்தான பழக்கம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான மூளையை பல வழிகளில் பாதிக்கிறது.
பிரெயின் வால்யூம் இழப்பு:
மூளையின் சைஸ் மற்றும் வால்யூம் உள்ளிட்டவை அதிக நுண்ணறிவு மற்றும் சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. புகைப்பிடித்தல் மூளையின் சப்கார்டிகல் பகுதிகளை (subcortical brain region) பாதிக்கிறது. மூளையின் சப்கார்டிகல் பகுதிகள் இன்பம், ஹார்மோன் உற்பத்தி, உணர்ச்சி மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடையவை. புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மூளை வால்யூம் லாஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.
டிமென்ஷியாவிற்கு காரணமாகும் புகைப்பழக்கம்:
புகைப்பழக்கம் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் இருப்பதாக அல்சைமர்ஸ் சொசைட்டி தெரிவித்துள்ளது. புகைப்பிடிக்கும் அனைவருக்கும் டிமென்ஷியா வரும் என்பதில்லை. எனினும் நிகோடின் நுகர்வை படிப்படியாக குறைப்பதன் மூலமும், முழுவதுமாக புகைப்பழக்கத்தை நிறுத்துவதன் மூலமும் டிமென்ஷியா ஆபத்தை ஒருவர் குறைத்து கொள்ளலாம்.
பக்கவாதம் ஏற்படும் அபாயம்:
அதிகமாக புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துகளை World Stroke Organization சுட்டிக்காட்டி இருக்கிறது. புகைப்பழக்கத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக அதிகரிப்பதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 20 சிகரெட் பிடிப்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு புகை பிடிக்காதவர்களை விட 6 மடங்கு அதிகம். ஆயிரக்கணக்கான கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் Tobacco smoke-ல் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்களின் நுரையீரலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன இந்த கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள். கெமிக்கல்ஸ் ரத்த ஓட்டத்தில் கலப்பது செல்களை சேதப்படுத்துவதோடு மற்றும் உடல் செயல்படும் விதங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறத்து. இதனால் ரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.
அறிவாற்றலில் பாதிப்புகள்:
டிமென்ஷியா என்பது சிந்திக்கும் திறன், நினைவாற்றல், இயல்பான நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கும் நிலையாகும். முன்னரே கூறியபடி புகைப்பழக்கம் ஒருவரின் மூளை வயதை துரிதப்படுத்தலாம். இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. தவிர உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற வாஸ்குலர் கண்டிஷன்ஸ் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட அபாயங்களும் புகைப்பழக்கத்துடன் தொடர்புடையவை. இந்த நிலைமைகளும் டிமென்ஷியா உண்டாகும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பிரெயின் கேன்சர்:
புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோய்க்கு மட்டுமல்ல மூளை புற்றுநோய்க்கும் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக் ஃபாரஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நிகோடின் நுரையீரல் புற்றுநோய் செல்களை மூளைக்குள் மாற்றுவதை ஊக்குவிப்பதை கண்டறிந்துள்ளனர். இவர்கள் தங்கள் ஆய்விற்காக 281 நுரையீரல் கேன்சர் நோயாளிகளை பரிசோதித்தனர். ஆய்வின் முடிவில் புகைப்பிடிப்பவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
No comments:
Post a Comment