நம்மில் அதிகம் பேர் உணர்வுபூர்வமாக செயல்படக்கூடியவர்களாகவும் பல விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு மிகுந்த கவலைக்கு உள்ளாகும் தன்மையை கொண்டுள்ளவராகவும் இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்ட குணமுடையவர்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத சில விஷயங்களை கூட மனதில் போட்டுக் கொண்டு அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவர். ஆனால் இப்படி வாழ்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இவ்வாறு அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு அடிப்படையாக பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
தன்னைப் பற்றி எதிர்மறையாக பேசுதல் : சிலர் தங்களைப் பற்றிய குறைவாக எடை போட்டுக் கொள்வதும், தங்களையே அடிக்கடி குற்றம் சொல்லும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். எனவே வாழ்க்கையில் ஏதேனும் எதிர்மறையான செயல்கள் நிகழும்போது, அது உங்களால் தான் நிகழ்ந்தது என மிக எளிதாக நம்பி உங்கள் மீது பழியை போட்டுக்கொண்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்.
சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் : பலருக்கும் தன்னுடைய இளமைப் பருவத்தில் போதுமான அளவு பெற்றோர்களின் துணையோ அல்லது அடிக்கடி கேலி கிண்டல் போன்ற விஷயங்களினால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ இது போல அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
சுய மரியாதை குறைவு : உங்களிடம் சுயமரியாதையானது குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்போதுமே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். விஷயங்களை தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமையும்.
பரிபூரணமாக நினைத்துக் கொள்வது : தாங்கள் முழுமையான ஒரு மனிதராகவும் எது செய்தாலும் குறையில்லாமல் செய்வதாகவும் நினைத்துக் கொள்பவர்களிடம் யாரேனும் சில விமர்சனங்களை கூறினால் இவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்
மன அழுத்தம் அல்லது மனசோர்வு : மன அழுத்தம் அல்லது மனசோர்வு இருக்கும் போது யாரேனும் உங்களிடம் எதையேனும் கூறினால் அதனை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதுவும் கூட விஷயங்களை நீங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்ள ஒரு காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து வெளி வருவதற்கு சில குறிப்புகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் மற்றவர்கள் தங்கள் மனதினுள் இருப்பதைத்தான் பேசுவார்களே தவிர, உங்களைப் பற்றிய எண்ணங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதாவது சில நேரங்களில் மற்றவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஆனால் அது உண்மையாகவே அவர்களது தனிப்பட்ட குணத்தின் வெளிப்படாத தான் இருக்கும்.
அதுபோல சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஏமாற்றம் அடைபவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதையும், அதில் தவிர்க்க முடியாது என்பதையும், அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது பற்றி தான் யோசிக்க வேண்டும். மற்றவரோடு இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனில், அதற்கு உங்கள் மீது மட்டும் குறை இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் ஓர் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு புறமும்கூட பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உங்களது மனநிலைக்கு ஒத்துப் போகும் ஒருவரிடம் நெருக்கமாக இருப்பது நல்லது.
அனைவரிடமும் உதவிக்காக கையேந்துவதும் கூடாது. ஒருவேளை அவர்கள் உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில் அல்லது நமக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தாலும் நாம் ஏமாற்றம் அடைவோம். இவை அனைத்தையும் விட உங்களால் அனைவருக்கும் உதவ முடியாது என்பதையும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே மன நிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment