சமீப காலமாக பலரையும் கீல்வாதம் என்று கூறப்படும் ஆர்த்தரைடிஸ் நோய் பாதித்து வருகிறது. மூட்டுகளில் வீக்கம், தேய்மானம், வலி, தசை பலவீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆர்த்தரைடிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. நோய் என்று கூறுவதை விட, இதை குறைபாடு என்று கூறலாம். முழங்கால் வாதம், வீக்கம் என்று வந்தாலே, அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்த்தரைடிஸ், அவர்கள் உட்கார்ந்து எழுந்தால் கூட தீவிரமான வலியை ஏற்படுத்தும். எனவே, ஆர்த்தரைட்டிஸ் வந்தாலே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குறைபாட்டுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. உணவுக் கட்டுப்பாடு, ஃபிசிகல் தெரபி முதல் வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல், ஆர்த்தரைடிஸ் குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
உடல் எடை குறைப்பு மற்றும் கட்டுப்பாடு : அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கால்கள், கால் மூட்டுகள் மீது அதிக அழுத்தம் கொடுக்கும், அது கீல்வாதத்தை தீவிரமாக்கும். எனவே, ஆர்த்தரைடிசால் பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கன்சர்வேட்டிவ் சிகிச்சைகள் : ஃபிசிக்கல் தெரபி : முழங்கால் மூட்டுவலி சிகிச்சைக்கு லேசர் சிகிச்சை, காந்தவியல் சிகிச்சை மற்றும் வைப்ரேஷனல் எனர்ஜி சிகிச்சை உள்ளிட்ட பல விதமான சிகிச்சைகள் வலி நிவாரணம் அளிக்கிறது.
உடற்பயிற்சி : முழங்கால் வலி, மூட்டு வலி இருப்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வீட்டிலேயே கூட செய்யக்கூடிய தெரப்யூடிக் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
மனம் மற்றும் உடல் ஒருங்கிணையும் பயிற்சிகள் : மூட்டு கீல்வாதம் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, மனம் மற்றும் உடல் ஒருங்கிணைந்து செய்யும் பயிற்சிகளான யோகா, லேசான ஏரோபிக்ஸ், தியானம் ஆகியவற்றையும் சிகிச்சையாக மேற்கொள்ளலாம்.
ஏரோபிக் உடற்பயிற்சிகள் : வலியைக் குறைப்பதற்கும், முழங்கால் கீல்வாதம் உள்ளவர்களின் உடல் ரீதியாக செயல்படவும், சாதாரணமாக இயங்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏரோபிக் பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
Hydrokinesitherapy ஹைட்ரோ-கெனிசிஸ் மற்றும் பால்னியோதெரபி உள்ளிட்ட தேரபிகள் வலி நிவாரணம், வலிமையாக்குவது, அழற்சியைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள்: முறையான பயிற்றுனரிடம் அல்லது ஃபிசியோதெரபிஸ்ட் இடம், தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளை பெறலாம். ஒவ்வொரு நபரின் பாதிப்புக்கு ஏற்ற அளவுக்கு பயிற்சிகள் மாறுபடும்.
உள்-மூட்டு ஊசிகள்: ஹையலூரோனிக் அமிலம், கார்டிகோஸ்டீராய்டுகள் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா ஆகியவற்றை மூட்டுக்குள் செலுத்துவது மாற்று சிகிச்சையாகக் கருதப்படுகிறது.குருத்தெலும்பு சேதத்தை குறைக்கும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையில் உட்கொள்ளலாம்.
அக்குபஞ்சர்:, முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உடனடியாக வலியில் இருந்து நிவாரணம் பெற அக்குபஞ்சர் பயன்படுத்தலாம். ஆனால், இது எவ்வளவு நாட்களுக்கு பலன் அளிக்கும், எந்த அளவுக்கு நம்பகமானது என்பதற்கு சான்றுகள் இல்லை.
அறுவை சிகிச்சையை தவிர்க்க வேண்டும் ஆனால் தீவிரமான பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணியாக ஓபியாய்டுகள், வலி குறைக்க மூட்டுகளில் பூசப்படும் கிரீம், ஜெல் போன்றவை பரிந்துரைக்கப்படும்.நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக், ஊன்றுகோல், மூட்டுகளுக்கான பிரேஸ்கள் ஆகியவை சப்போர்ட்டாக இருக்கும்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment