உடற்பயிற்சி செய்வது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதுடன், ஆயுளையும் அதிகப்படுத்தும் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நடை பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, ஜிம்மில் உடற்பயிற்சி என எந்த வடிவத்திலாவது தினந்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. உடல் உழைப்பு குறைந்து வரும் இந்த காலத்தில் தினமும் காலையில் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வது மிகச் சிறந்தது. ஆனால் நம்முடைய உடல் பலத்திற்கு மேலாக ஒருபோதும் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. உடற்பயிற்சியின் போது பெருமூச்சு, உடல் சோர்வு இவை தோன்றினால் உடற்பயிற்சியை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும்.
நடைப்பயிற்சியின் போது அல்லது நடைப்பயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் நடைப்பயிற்சியினால் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக முளைகட்டிய பாசிப்பயறு, வேக வைத்த கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. உடற்பயிற்சிக்கு பின் நமக்கு நீர்ச்சத்து குறைந்தாலும்கூட, பசிப்பதுபோல் தோன்றும். அதனால், உடற்பயிற்சிக்கு முன்னும், உடற்பயிற்சி செய்யும்போதும், உடற்பயிற்சிக்கு பின்னும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகம் பசி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment