நீண்ட நாள் உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..? - Agri Info

Adding Green to your Life

February 26, 2023

நீண்ட நாள் உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

 உடலில் சேரும் அழுக்குகளை நீக்க நாம் தினமும் குளிக்கிறோம். ஆனால், அடிக்கடி நாம் தலைக்கு குளிப்பதில்லை. சிலர் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பார்கள். இன்னும் சிலர், நேரமின்மை காரணமாக சிலர் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பார்கள். தினமும் தலைக்கு குளிப்பது, கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

அடிக்கடி தலைக்கு குளித்தால், தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்  நீங்கி, கூந்தல் வறட்சியாகவும் கரடு முரடாகவும் காணப்படும். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் நாம் தலைக்கு குளிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என, நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?. இதற்கான பதிலை நாங்க கூறுகிறோம். அத்துடன் எவ்வளவு நாட்களுக்கு நாம் நமது தலைமுடியை வாஷ் செய்யாமல் வைத்திருக்கலாம் என பார்க்கலாம்.

தலைமுடியை கழுவாமல் இருந்தால் என்ன ஆகும்?

நீண்ட நாட்களுக்கு உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் வைத்திருந்தால், முடி வளர்ச்சி தடைபடும். அத்துடன், முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நாம் வெளியில் சென்று வரும் போது தலை முதல் கால் வரை தூசி படிந்திருக்கும். நாம் அதை குறிப்பிட்ட நாட்களில் சுத்தம் செய்யவில்லை என்றால், உச்சந்தலையில் அது அழுக்காக படிந்து விடும். அந்த அழுக்குகள், முடியின் வேர் துவாரங்களை முற்றிலும் முடிவொடுவதால், ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

தலைமுடியை குறிப்பிட்ட நாட்களுக்கு கழுவவில்லை என்றால், உங்கள் தலையில் எண்ணெய் படிந்துவிடும். இதனால், தலையிலும் முடியிலும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை, நீங்கள் எண்ணெய்க்கு பதில் கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தினால், அவை அப்படியே உங்கள் கூந்தலில் தங்கிவிடும். இதனால், முடிகள் வறட்சியடையும்.

முடியில் உள்ள அழுக்குகள் பொடுகை ஏற்படுத்தாது. இருப்பினும், உங்கள் தலைமுடியை நீண்ட நாட்களுக்கு கழுவாத போது, தலையில் படிந்துள்ள எண்ணெய் செதில் செதிலாக உருவாகலாம்.

உச்சந்தலை அரிப்புக்கான காரணம்?

உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில், சிலவற்றை இங்கே காணலாம் :

- பொடுகு பிரச்சனை

- நாம் உபயோகிக்கும் ஹேர் கேர் தயாரிப்புகளின் எதிர்வினை.

- தயாரிக்குகளில் சேர்க்கப்படும் அமிலங்கள்.

- தலை பேன்.

- தலையில் ஏற்படும் தடிப்புத் தோல் அழற்சி.

முடி வளர்ச்சி அதிகரிக்க இதை செய்யுங்கள் :

- ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யுங்கள்.

- ஒரு மென்மையான பிரெஷ் கொண்டு தலைமுடியை ஸ்க்ரப்பிங் செய்யவும்.

- ஒரு சிறந்த ஆண்டிசெப்டிக் ஷாம்பூவை கொண்டு, உங்கள் தலை முடியை 2 நாட்களுக்கு ஒருமுறை வாஷ் செய்யவும். உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

- தலையை துணிகளால் கட்டி வைப்பதை தவிர்க்கவும்.

- தலைமுடியை எப்போதும் மென்மையாக கையாள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, குளித்து முடித்துவிட்டு தலையில் உள்ள ஈரத்தை உலர்த்தும் போது, தலையில் சிக்கு எடுக்கும் போது, ஹேர் ட்ரையராய் பயன்படுத்தாமல் ஈரத்தலையில் சிக்கு எடுப்பது போன்ற சமயங்களில் தலைமுடியை மென்மையாக கையாள வேண்டும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment