பல் தேய்க்கும்போது இரத்தக் கசிவு இருக்கா..? அப்போ இந்த ஈறுகள் பராபரிப்பில் கவனம் செலுத்துங்க..! - Agri Info

Adding Green to your Life

February 19, 2023

பல் தேய்க்கும்போது இரத்தக் கசிவு இருக்கா..? அப்போ இந்த ஈறுகள் பராபரிப்பில் கவனம் செலுத்துங்க..!

 ஒவ்வொருவருக்கும் பற்கள் என்பது மிகவும் முக்கியமானவை ஆகும். உணவை நன்றாக அரைத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், நாம் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை உட்கொள்வதற்கு பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் முடியும். பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது ஈறுகள். ஈறுகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக நாம் பாதுகாக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே முதலில் நம்முடைய ஈறுகளின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான ஈறுகள் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும். மேலும் நாம் பற் துலக்கும் போது அதிலிருந்து ரத்தம் வராமல் இருந்தால் மட்டுமே உங்களது ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளன என்று பொருள். ஆனால் உணவு பழக்கம், வயது, போன்ற பல்வேறு காரணிகள் நம்முடைய ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. ஈறுகளை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பதை பற்றிய சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

  • சரியான முறையில் தினசரி பற்களை சுத்தம் செய்ய வேண்டும்
  • தினசரி சரியாக பற்களை சுத்தம் செய்தால் தான் வாய் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மென்மையான டூத் பிரஷ் கொண்டு நமது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நமது டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
  • பல் இடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்:

    நம்முடைய ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினசரி உணவு உண்ட பிறகு பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதன் மூலம் பிளேக் எனப்படும் பற்களில் உண்டாகும் கெட்டியான மாசு படிவங்களையும் சுத்தம் செய்ய இது உதவுகிறது.

    ஒருவேளை நாம் உண்ட உணவு பொருட்கள் மற்றும் பிளேக் ஆகியவை பற்களில் நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவை நாளடைவில் கெட்டியாகி டார்டார் எனப்படும் கெட்டியான ஒரு படிவமாக மாறி பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வழி செய்து விடும். இது உண்டானால் உங்களால் சாதாரணமாக பல் துலக்குவத்தின் மூலம் அவற்றை நீக்க முடியாது. ஒரு பல் மருத்துவரை அணுகி தான் உங்கள் பற்களை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.

    புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்:

    புகைப்பிடிப்பது, பார்மசாலா, குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை ஈறுகளில் ரத்த ஓட்டத்தை குறைத்து பல்வேறு நோய் தொற்றுகள் உருவாக வழிவகை செய்கிறது. உங்கள் ஈறுகளில் ரத்தம் வடிவதை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக புகை பிடிப்பது போன்ற அனைத்து பழக்கங்களையும் நிறுத்த வேண்டும்.

    உணவில் கவனம் தேவை:

    நாம் என்ன விதமான உணவை உட்கொள்கிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை நாம் உட்கொள்ளும்போது அவை பல் சொத்தை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சை காய்கறிகளை நாம் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை ஈறுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    சீரான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது:

    நாம் அவ்வப்போது சீரான இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று நமது பற்களை சோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை டார்டார் எனப்படும் பிரச்சனையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பல் மருத்துவரிடம் சென்று மட்டுமே நான் அதனை நீக்கிக் கொள்ள முடியும். எனவே சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு ஈறுகளில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment