திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் அலுவலர்கள் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) ஆகிய பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ வேறு முன்னுரிமையோ சலுகைகளோ, பிற்காலத்தில் கோர இயலாது இதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் http://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் 06.03.2023 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அலுவலகத்தில் நேரிலோ தபால் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment