பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிப் பிடித்தம் கட்டாயம் பிடிக்கப்படுவது நடைமுறையில் இருந்தது.
அதாவது ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary), அகவிலைப்படியில்(Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும். அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும். தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது.
இந்நிலையில் ,ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கடந்த 2014ல் சில திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகையை ரூ. 6500-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தியது. மேலும், 01.09.2014 க்கு முன்னர் பணியில் சேர்ந்த தகுதியான பணியாளர்கள் அனைவரும் தங்களது ஊதியத் தொகையில் 8.33 சதவீதத் தொகை பணியாளர் பங்காக செலுத்தி பயனடைய முடியும். மேலும், 2014க்கு முந்தைய EPFO பயனாளர்கள் இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்த 6 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பணியாளர்களும் தனியார் நிறுவனமும் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியத்திற்கு பணியாளர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறையை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த புதிய நடைமுறைகள் குறித்தும் காலக் கெடுகளும் இருந்தும் தொழிலாளர்களுக்கு தெரியாத காரணத்தினால்,பெரும்பாலானோர் விண்ணப்பிக்கமால் இருந்து வந்ததனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதன்படி, 2014க்கு முந்தைய EPFO பயனாளர்கள் புதிய திட்டத்தின் கீழ் பயனடைய மார்ச்- 3 வரை காலக்கெடு கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததது.
இந்நிலையில், புதிய திட்டத்தின் கீழ் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், மார்ச் 3-ம் தேதிக்குள் இவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2014க்கு முன்பு சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்கள் ஊதியத் தொகையில் 8.33 சதவீதத் தொகை பணியாளர் பங்காக செலுத்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு, பணியாளர்களும் தனியார் நிறுவனமும் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்கள் அறிய Pension on Higher Salary - online application for validation of joint option இந்த இணைப்பக் கிளிக் செய்யலாம்.
0 Comments:
Post a Comment