eshram: இ-ஷ்ராம் போர்ட்டல் மூலம் வேலை தேடுவது எப்படி: முழு விவரம் இதோ! - Agri Info

Adding Green to your Life

February 6, 2023

eshram: இ-ஷ்ராம் போர்ட்டல் மூலம் வேலை தேடுவது எப்படி: முழு விவரம் இதோ!

 நாட்டின் ஒட்டுமொத்த பணியாளர்களில், கிட்டத்தட்ட 90% பேர் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து வருகின்றனர். உதாரணமாக, ஜவுளிக் கடை  பணியாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு, அடிப்படை ஊதியமோ, சம்பளத்துடன் கூடிய விடுப்போ, ஓய்வூதியமோ, மகப்பேறு விடுப்போ என எதுவும் இல்லை. இத்தகைய, பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை அளிக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒன்று தான் இ- ஷ்ராம் போர்டல்.

இ-ஷ்ராம் போர்டல் என்றால் என்ன?  

இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுகளை சேகரிக்கும் பொருட்டு மத்திய அரசு "அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்” (eSHRAM Portal)  மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த தளத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், மீனவர்கள், தெரு வியாபாரிகள், கடைக்காரர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், Zomato, Swiggy, Ola போன்ற சாலைப்   பணியாள்கள் (Gig Workers) , அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இதுநாள் வரையி

அதாவது, வரி செலுத்துபவர் மற்றும் ESI/ PF திட்டத்தின் உறுப்பினர்கள் இல்லாத பணியாளர்கள் அனைவருமே அமைப்புசாரத் தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர்.

பதிவு செய்தால் நன்மைகள் என்னென்ன? 

பதிவு செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் தனித்துவ எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த தளத்தின் பதிவு செய்வதன் மூலம், பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் PMSBY (Prime Minister Suraksha Biman Yozana) ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம்.

Pradhan Mantri Shram Yogi Maan-Dhan Yojana,  "பிரதமர் ஷ்ரம்-யோகி மாந்தன்” என்ற  ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்  சேர்ந்து, 60 வயது முதல் ரூ.3,000-த்தை மாதந்திர ஓய்வூதியமாக பெற முடியும். தொழிலாளர்கள் சிறிய பங்களிப்பு தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்.(உதாரணமாக, 29 ஆவது வயதில் சேர்ந்தால், மாதந்தோறும் ரூ.100 மட்டும் தனது 60 வயது வரை செலுத்தினால் போதும். 18 வயதில் இத்திட்டத்தில் சேரும் தொழிலாளர் மாதந்தோறும் ரூ.55 செலுத்தினால் போதும்) 18.07.2022 தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் இருந்து  61,842 பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதுதவிர, மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி  வரும் பல்வேறு சமூகபாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்களை பெற முடியும்.

வேலைவாய்ப்பு:   தேசிய வேலைவாய்ப்பு தளத்தை (National Career service portal) இ-ஷ்ராம் தளத்துடன் இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. National Career Service Portal என்பது Naukri, Monster, Linkedin போன்ற டிஜிட்டல் தளமாகும்.வேலை தேடுவோர்களையும் மற்றும் வேலை வழங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த தளம் கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2023 பிப்ரவரி 4ம் தேதியின் படி, இந்த தளத்தில் வேலை அளிக்க கூடியவர்கள் எண்ணிக்கை மட்டும் 812,368 ஆக உள்ளன. இவர்கள், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள கிட்டத்தட்ட 324,737 காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த இரண்டு தளத்தையம் ஒருங்கிணைத்தன் மூலம், இ-ஷ்ராம் தளத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, NCS போரட்டலில் பதிவிடும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிந்துகொள்கின்றனர். இந்த இணைப்பின் மூலம், 1.2  லட்சத்திற்கும் மேற்பட்ட இ-ஷராம் தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இ-ஷ்ராம் போரட்டலில் பதிவு செய்வது எப்படி?  

e-shram போரட்டலில்,   ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது உங்கள் அருகில் இருக்கும் பொது தகவல் மையத்திற்கு (Common service centre) நேரடியாக சென்று பதிவு செய்யலாம்.  


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment