சென்னையில் 2025ம் ஆண்டு வாக்கில், திறன்வாய்ந்த (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8 லட்சமாக இருக்கும் என்று (1,84,327) மதிப்படப்படுகிறது. ஆனால், வெறும் 83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வறிக்கை கணிக்கிறது.
சென்னையில் அதிகம் வேலை தரும் துறைகள் என்ன.... இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து இங்கு விளக்கமாக பாப்போம்
சென்னையின் பொருளாதாரம் என்ன? சென்னை மிகவும் தொழிற்வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஒன்று. மாநிலத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 4.8% ஆகும்.
சென்னையின் பொருளாதாரம், பெரிதும் சேவைத் துறையைச் சார்ந்தது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், சேவைத் துறையின் பங்களிப்பு 85% ஆகும். தொழிற்துறையின் பங்களிப்பு 14% ஆகவும், வேளாண் துறையின் பங்களிப்பு சற்றேரக்குறைய 1% ஆகவும் உள்ளன. சென்னை பொருளாதார கட்டமைப்பில் சேவைத் துறையில் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்
துறை வாரியான பங்களிப்பு: வங்கிகள், வணிகப் பணிகள், காப்பீட்டுத் துறை ஆகிய மூன்று துறைகள் மட்டும் சென்னை பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 31% பங்களிப்பை அளிக்கின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளின் பங்களிப்பு 26% ஆக உள்ளன.
அதிகம் வேலை தரும் துறைகள் என்ன? மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 37% பேர் வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை மற்றும் பழுது பார்க்கும் (Transportation, Trade, Repair services) வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்துறையில் 18% பேரும், வங்கிகள், வணிகப் பணிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் 18% பேரும் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாக அமைப்பில் 11% பெரும், கட்டுமானத் துறையில் 7% பெரும் பணி செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
எனவே, சென்னையைப் பொறுத்த வரையில், வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை, மற்றும் பழுது பார்க்கும் துறை (Transportation, Trade, Repair services), வங்கிகள் துறை (Banking), தொழிற்துறை ( Manufacturing) ஆகியவை இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறைகளாக உள்ளன.
இளைஞர்கள் பற்றாக்குறை:
தமிழ்நாடு அரசின், 2018 திறன் இடைவெளி மதிப்பீடு ஆய்வறிக்கையின் படி, 2025ம் ஆண்டின் வாக்கில், சென்னையில் திறன்வாய்ந்த (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வெறும் 83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2025ல் சென்னையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் மட்டுமே கிட்டத்தட்ட 48,524 திறன் வாய்ந்த இளைஞர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி துறையில் 23,543 இளைஞர்களும், ரியல் எஸ்டேட் துறையில் 18,013 இளைஞர்களும் தேவைப்படுகின்றனர். எனவே, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களும், புதிய நல்ல வேலைக்கு செல்ல வேண்டி போராடும் இளைஞர்களும் சென்னையின் தொழில் சந்தையின் தன்மை அறிந்து திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment