ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான முதற்கட்ட தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 20,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - III) என 3 முறைகளில் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 முதல் 13 ஆகிய தேதிகளில் கணினி வழியில் முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை https://ssc.nic.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், கணினி வழியில் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability) காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment