தமிழ்நாடு புத்தெழில் மற்றும் புத்தாக்க இயக்கம், TANSEED ஆதார நிதி மானியத் திட்டத்தின் 5வது பதிப்பிற்கான (5th Edition) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் (START UPS) ரூ.10 லட்சம் வரை மானிய நிதி வழங்கப்பட்டு வந்தது.
TANSEED ஆதார நிதி மானியத் திட்டம்: தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் நடைபெற்றுள்ளது. தற்போது 5ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது.
டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 84 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள. தற்போதைய, 5ம் பதிப்பு முதல் இத்திட்டம் 3% அளவிலான சிறு பங்கை (equity model for 3% stake) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பின் மூலமாக மேலும் 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெற தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
5வது பதிப்பில் சிறப்பு சலுகைத் தொகுப்பு:
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் TANSEED திட்டத்தின் கீழ், பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்கள் முதன்மையாகக் கொண்ட ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, மேற்கண்ட துறைகள் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மானிய நிதி ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த சிறப்பு சலுகை தொகுப்பு, 5வது பதிப்பின் கீழ் நடைமுறைக்கு வர இருக்கிறது. எனவே, பெண்கள் முதன்மையாகக் கொண்ட ஸ்டார்-அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை மானியம் பெறலாம்.
பொது நிபந்தனைகள்: பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை வடிவமைத்து பெரும் சந்தை மதிப்பீடுகளை உருவாக்கக்கூடிய மற்றும் வருங்காலங்களில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளுடன் சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்திய அரசின் DPIIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in என்ற இணையதளத்தின் வழியே, மார்ச் 5, 2023 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள tanseed@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment