தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 டிசம்பர் பருவத்திற்கான துறைத் தேர்வு முடிவுகளை (Departmental Examination) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்னதாக, டிசம்பர் 2022-ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. கிட்டத்தட்ட 197 துறைத் தேர்வுகளுக்கு 12/12/2022 முதல் 21.12.2022 வரை நடத்தப்பட்டது. சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட 39 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றன.
இந்நிலையில், இரண்டாம் நிலை மொழித் தேர்வுக்கான (SECOND CLASS LANG TEST PART-“ A”-WRITTEN EXAMINATION) முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படிக்காமல், தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணி செய்து வரும் அரசு ஊழியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அடுத்தக் கட்டமாக நடைபெறும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய தளத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில், துறைத் தேர்வுகள் தேர்வு முடிவுகள் கிளிக் செய்ய வேண்டும்.
'RESULTS OF DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்தவுடன், தேர்வு முடிவுகள் பட்டியல் தோன்றும்.
தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment