Search

UPSC: இந்திய வனப் பணி தேர்வு - யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு..!

 இந்தியக் குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தோராயமாக 150 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 21 ஆம் நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

இத்தேர்வை எழுத வயது வரம்பாக 21 நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிரிவினருக்கு ஏற்ற வயது தளர்வுகள் உண்டு. கல்வித்தகுதியாக Animal Husbandry & Veterinary Science,Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology/ Agriculture, Forestry/Engineering போன்ற பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். முதல் நிலை தேர்வுகள் 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment