இந்திய பாராளுமன்றத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட கலாசேத்திரா அறக்கட்டளையின் ருக்மிணி தேவி கவின் கல்லூரியில் காலியாக உள்ள பரதநாட்டியம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர் இடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
பரதநாட்டியம் பயிற்றுநர்: 1 காலியிடம்.
விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நிகழ்ச்சியில் குறைந்தது 2 மணி நேரம் நாட்டியம் அரங்கேற்றும் செய்யும் திறன் வேண்டும். நாட்டுவங்கம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் இசை/நடன விதிகளை எழுத தெரிந்தால் கூடுதல் நன்மையாகும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு, ஆரம்பகட்ட ஊதியமாக ரூ.53252 கொடுக்கப்படும். சம்பள நிலை: 35,400 - 1,12,400 ஆகும்.
இசை பயிற்றுனர்: 1 காலியிடம் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கர்னாடிக் இசையில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வேண்டும். நாட்டுவங்கம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இசை விதிகளை எழுதவும்/படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்திய மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் நன்மையாகும். சம்பள நிலை: 35,400 - 1,12,400. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.53252 வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை, Director, kalakshetra Foundatation, Thiruvanmiyur,chennai - 600 041என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப அறிவிப்பு வெளியான (மார்ச் 3ம் தேதி) 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது .
Click here for latest employment news
0 Comments:
Post a Comment