இந்த சம்மருக்கு 'ஏர் கூலர்' வாங்க போறீங்களா..? மொதல்ல இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

March 3, 2023

இந்த சம்மருக்கு 'ஏர் கூலர்' வாங்க போறீங்களா..? மொதல்ல இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

 நாட்டில் கோடைகாலம் ஆரம்பமானதும் கூலர்ஸ் மற்றும் ஏ.சிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கடைகள் பல ஆபர்களை அறிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூலர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இருப்பினும், சரியான கூலரை எப்படி பார்த்து வாங்குவது என்பது பலருக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் கூலர்களை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை காண்போம்.

1. வாங்கவேண்டிய கூலர்களின் வகையைத் தீர்மானியுங்கள் :

ஒரு பயனுள்ள கூலிங் அம்சத்திற்கு சரியான வகை கூலர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு, பெர்சனல் கூலர்களை தேர்வு செய்யவேண்டும். பெரிய அறைகளுக்கு, டெசர்ட் கூலர்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது.

* 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பெர்சனல் கூலர்களை வைக்கலாம்.

* அதுவே 300 சதுர அடிக்கு மேல் உள்ள அறையில் டெசர்ட் கூலர்களை வைக்கலாம்.

2. தண்ணீர் தொட்டியின் திறன்

ஏர் கூலர்களில் தண்ணீர் தொட்டி திறன் ஒரு முக்கிய காரணியாகும். கூலர்களின் அளவு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ, அதே அளவு தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். பயனுள்ள கூலிங்கிற்கு அறை அளவை விட அதிக திறன் கொண்ட ஏர் கூலரை எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். அதாவது,

சிறிய அறைகள்: 15 லிட்டர் தொட்டியின் திறன்

நடுத்தர அளவிலான அறைகள்: 25 லிட்டர் தொட்டியின் திறன்

பெரிய அறைகள்: 40 லிட்டர் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட ஏர் கூலரை தேர்வு செய்ய வேண்டும்.

3. கூலரை வைக்க வேண்டிய இடம்

உங்கள் அறைக்கு வெளியே அல்லது உங்கள் கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டை மாடியில் குளிரூட்டியை வைக்க விரும்பினால் டெசர்ட் கூலரை வாங்கலாம். உட்புற பயன்பாடுகளுக்கு, பெர்சனல் அல்லது டவர் கூலர்ஸ் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.

4. இடத்தின் காலநிலையை கருத்தில் கொள்ளுங்கள்

வறண்ட கால நிலைகளில் டெசர்ட் கூலர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரப்பதமான பகுதிகளுக்கு, பெர்சனல் / டவர் கூலர்ஸ் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. இரைச்சல் அளவை சரிபார்க்கவும்

சில கூலர்ஸ் மிகவும் சத்தமாக இருக்கும். எனவே, நீங்கள் கடையில் கூலர்களை வாங்குவதற்கு முன் அதன் இரைச்சல் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் அதன் அளவை அதிகபட்ச விசிறி வேகத்தில் சரிபார்க்கவும்.

6. தானாக நிரப்பு செயல்பாட்டைப் பாருங்கள்

கூலர்சில் மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்புவது ஒரு சிக்கலான பணியாகும். எனவே ஆட்டோஃபில் செயல்பாட்டை வழங்கும் கூலர்ஸை தேர்வு செய்ய வேண்டும். அவை நிர்வகிக்க எளிதானவை மட்டுமல்ல, சிறந்த மற்றும் திறமையான குளிரூட்டலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆட்டோ ஃபில் அம்சம் தொட்டியை முழுமையாக உலரவிடாமல் தடுக்கும். எனவே மோட்டார் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

7. கூலிங் பேட்களின் தரத்தை பார்க்க வேண்டும்

குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் உள்ளன. கம்பளி மரம், ஆஸ்பென் பட்டைகள் மற்றும் தேன்கூடு பட்டைகள் ஆகியவை மிகவும் பொதுவானவை. இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விட சிறந்தவை. ஏனெனில் அவை நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன. மேலும் அவை பராமரிப்பிலும் எளிதாக இருக்கும்.

8. கூடுதல் ஐஸ் சேம்பர்

வேகமான கூலிங்கிற்கு, சில உற்பத்தியாளர்கள் கூலர்ஸ்களுக்கு ஒரு பிரத்யேக ஐஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். தொட்டியில் உள்ள தண்ணீரை விரைவாக குளிர்விக்க நீங்கள் அவற்றில் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

9. மின் நுகர்வு

வழக்கமாக, நவீன கூலர்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அவை மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இயக்க முடியும்.

10. ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு வடிகட்டி போன்ற கூடுதல் அம்சங்கள்:

இப்போதெல்லாம் கூலர்ஸ் ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு, டஸ்ட் ஃபில்ட்ர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment