இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: அலுவலக ஓட்டுநர்
காலியிடங்கள் எண்ணிக்கை: ஐந்து. இதில் பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படைத் தகுதிகள்: குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக வாகனம் (Light motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும். வாகனம் பழுதுபார்ப்பதில் (vehicle repair) குறித்து அறிந்திருக்க வேண்டும்.
மொழி அறிவு: உள்ளூர் மொழியான மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.03.2023 அன்று 28- 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாகன ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 450 ஆகும். பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50-ஐ மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு, Recruitment for the Post of Driver in Reserve Bank of India, Mumbai என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment