தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... - Agri Info

Education News, Employment News in tamil

March 20, 2023

தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்...

 கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.

 இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும். 

யாருக்கு பாதிப்பு ஏற்படும் தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். 

கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.

கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள் கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும். 

20-20-20 விதி கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். 

கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம். கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமை நிச்சயம் தவிர்க்கலாம்.

 கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள். Dr. B.மேஷாக் பீட்டர், MBBS, D.O.,கண் மருத்துவ நிபுணர் ராஃபா கிளினிக்தென்காசி.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment