Search

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் .... செக் செய்வது எப்படி?

 tnpsc group 4 exam results: குரூப் 4 நிலை பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்களது பதவி எண்-ஐ சமர்க்க வேண்டும். தாங்கள் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை திரையில் தோன்றும்.

அடுத்த கட்டமாக, இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தகுதியான நபர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment