Search

உங்கள் வாழ்க்கையை ரிலாக்ஸ் ஆக்கும் 5 டிப்ஸ்..! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

 உடல்நலனை போலவே மன நலனும் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், தினசரி மன நலனுக்காக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், கலாச்சார ரீதியாக நாம் கடைப்பிடிக்கக் கூடிய சாதாரண வாழ்வியல் உத்திகள் நமக்கு நல்ல மன நலனையும், நிம்மதியும் தரக் கூடியவை ஆகும்.கடின முயற்சிகள் எதுவும் தேவையில்லை. 

நல்ல தூக்கம், தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளே போதுமானது. தினசரி நம் அன்றாட வாழ்வில் நாம் இவற்றை கடைப்பிடித்தால் கவலையின்றி வாழலாம்.

முறையான தூக்கம் : ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான உணவு, நீர், காற்று போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு தரமான தூக்கமும் அவசியம். தூங்கும்போது தான் நம் உடலும், மனமும் தம்மை புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சி அடையும். 

தினசரி 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமானது. இதற்கு குறைவான தூக்கத்தை கொண்டவர்களுக்கு நிச்சயமாக மனநல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆரோக்கியமான உணவு : ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் உடல்நலன் காக்கப்படும். ஆனால், மனநலனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழக் கூடும். 

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் குடல்நலன் மேம்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான் பலருக்கு மன உளைச்சலை தருகிறது. வாயு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற எந்த தொந்தரவுகளும் இல்லை என்றால் மனம் நிம்மதி அடையும்.

பொழுதுபோக்கு : எந்த நேரமும் பணி செய்து கொண்டே இருப்பது, விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களில் கவனமின்மை போன்ற இயந்திரத்தனமான வாழ்க்கையால் நாளடைவில் மன அழுத்தம் உண்டாகும். ஆகவே, விறுவிறுப்பான பணிகளுக்கு இடையிலும் நம் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

சமூக தொடர்புகள் : இன்றைய தினம் எல்லோரும் ஸ்மார்ட்ஃபோன் உலகில் மூழ்கி விடுகின்றனர். சமூக தொடர்பு என்பதே இல்லை என்றாகிவிடுகிறது. அப்படியே இருந்தாலும் அது சமூக ஊடகங்கள் வரையில் தான். 

இவற்றை தவிர்த்து சக மனிதர்களை நேருக்கு, நேர் சந்தித்து உரையாட வேண்டும். தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்றால் அருகாமையில் உள்ள பூங்காக்களுக்கு சென்று புதிய நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி : உடற்பயிற்சி உடல்நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் உகந்தது தான். கடினமான பயிற்சிகள் தேவையில்லை. நடைபயிற்சி, உடலை நீட்டி முழங்குவது, பெருமூச்சு பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை கூட மனநலனை மேம்படுத்தும். யோகா செய்வதும் நல்ல பலனை தரும். 

சக மனிதர்களுடன் உரையாடிக் கொண்டே உடற்பயிற்சிகளை கூட்டாக செய்தால் ஒரே சமயத்தில் இரட்டை பலன்கள் கிடைக்கும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment