Search

ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம்: தூத்துக்குடி மாவட்ட அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

 தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

காலியிட விவரங்கள்: 

ஜீப் ஓட்டுநர்: 3

அலுவலக உதவியாளர்: 10

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனங்களை ஓட்டியதற்க்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள நிலை: ஜீப் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை சம்பளம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேரடியாக அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளம் thoothukudi.nic.inவாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை , மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாம் தளம் - கோரம்பள்ளம், தூத்துக்குடி. 628 101, தொலைபேசி எண் - (0461 - 2340579)  என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் மாலை 5.45 மணி வரை அனுப்பி வைக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment