உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான 6 சிறந்த யோகாசனங்கள்! - Agri Info

Adding Green to your Life

March 18, 2023

உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான 6 சிறந்த யோகாசனங்கள்!

 


உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது மக்களிடையே மிகவும் பொதுவான பாதிப்பாக நிலையாகி வருகிறது. இந்த உயர் இரத்த அழுத்தம் உங்கள் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் கூறுகின்றனர். இதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) வரையறையின்படி, இரத்த அழுத்தம் என்பது உடலின் முக்கிய இரத்த நாளங்களான தமனிகளின் சுவர்களில் இரத்தத்தை கொண்டு செல்வதன் மூலம் செலுத்தப்படும் செயல்முறையாகும். எனவே, இந்த செயல்பாட்டில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்று சொல்வார்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றுவது அல்லது சரியான மருத்துவ கவனிப்பு ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சில வழிகள் ஆகும்.

இவை தவிர, உயர் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக வைக்க யோகா ஒரு அமைதியான மற்றும் ஆரோக்கியமான வழியாக உள்ளது. இந்த பழங்கால முறை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. இந்த பதிவில் உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க கூடிய யோகா ஆசனங்களை பற்றி பார்க்கலாம்.


சக்ரவாகசனம் : இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது உங்கள் உடல், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு ஸ்ட்ரெச்சிங் செய்வதாகும். இதற்காக இதை செய்வதற்கு உங்கள் நான்கு கால்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்க வேண்டும். நீங்கள் மேலே பார்க்கும்போது மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வயிற்றை தரையை நோக்கி கீழே இறக்கவும். உங்கள் கன்னத்தை உங்கள் மார்பில் வைத்து, உங்கள் தொப்புளை உங்கள் முதுகெலும்பை நோக்கி இழுத்து, உங்கள் முதுகெலும்பை மேல் பகுதியை நோக்கி வளைக்கும்போது மூச்சை வெளியே விடுங்கள். இது பார்ப்பதற்கு பூனை நிற்பது போன்று இருக்கும்.




புஜங்காசன் : இது நாகப்பாம்பு போஸ் என்றும் அழைக்கப்படுகிறது, புஜங்காசனம் முக்கியமாக வயிற்றுப் பகுதியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை செய்வதற்கு தரையில் குப்பற படுத்து, கால்களை நீட்டி, இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மார்பை மேலே உயர்த்த வேண்டும். இது பல்வேறு நன்மைகளை செய்ய கூடிய ஆசனமாகும்.



சுகாசனம் : இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது சுலபமான ஆசனமாகும். இது எளிதான மற்றும் பயனுள்ள யோகா ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனத்தை செய்ய முதுகை நிமிர்ந்தும், கால்களைக் குறுக்காகவும் வைத்து உட்கார வேண்டும். அடுத்து கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்களுக்கு மூச்சை உள்ளிழுக்கவும். இது ஒரு நிதானமான நுட்பமாகும். மேலும், இது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது மற்றும் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்துகிறது.



சவசனம் : நீண்ட மன அழுத்தம் நிறைந்த வேலைக்குப் பிறகு, நாம் பெரிதும் விரும்புவது விரும்புவது நல்ல உறக்கம் தான். இந்த ஆசனத்திலும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதை செய்வதற்கு, மேல் நோக்கிய படி படுத்துக் கொள்ள வேண்டும். உடலை மிக இலகுவாக வைக்க வேண்டியது அவசியம். இந்த ஆசனம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.



குழந்தையின் தோரணை : இந்த ஆசனம் பார்ப்பதற்கு நீங்கள் ஓய்வெடுப்பது போல் தோன்றலாம், ஆனால் இந்த ஆசனம்  முதுகை ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. இது ஒரு நீண்ட, சோர்வுற்ற நாளின் முடிவில் படுக்கைக்கு முன் செய்து வந்தால், ஒரு சிறந்த மன அழுத்தத்தை நிவாரணியாக இருக்கும். இதை செய்ய, உங்கள் கைகளை உங்கள் முன் நேராக நீட்டியவாறு தொடங்குங்கள், பின்னர் மண்டியிட்ட நிலையில் ஓய்வெடுக்கும்.



பிரிட்ஜ் போஸ் : இந்த யோகா போஸ் உங்கள் உடலை வலுப்படுத்தவும், சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதய அடைப்புகளை சரிசெய்ய இந்த ஆசனம் பெரிதும் உதவும். இதை செய்வதற்கு, மேல் நோக்கி படுத்து கொண்டு, உங்கள் கால்களை அகலமாக வைக்கவும். அடுத்து, உங்கள் கால்களை வலுவாக அழுத்தி, பாயில் இருந்து பாதி உடலை உயர்த்தவும். பின்னர் உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து, உங்கள் உள்ளங்கைகள் தரையில் கீழ்நோக்கி இருக்கமாறு பார்த்து கொள்ளவும். இதை தினம்தோறும் செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு என்பது மிகவும் முதன்மையானது. எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில் 15-20 நிமிடம் யோகா செய்வதற்கு ஒதுக்கலாம். இது தசைகள், செரிமானம் மற்றும் பலவற்றை மேம்படுத்த உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment