நமது உடலின் குறிப்பிட்ட தசைகளை வலுப்படுத்த பிசியோதெரபி செய்யப்படுவது போல், கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த கண்ணிலும் தசைகளுக்கான பயிற்சிகள் உள்ளன. நமது கண்களில் 2 தசைகள் உள்ளன. அவை, வெளிப்புற தசைகள், உள்புற தசைகள். வெளிப்புற தசைகள், இரண்டு கண்களும் ஒரே திசைவில் நகர்வதை உறுதி செய்கின்றன.
உள் தசைகள், ஒரு குறிப்பிட்ட தூரம் அல்லது பொருளில் கவனம் செலுத்த கண்களுக்கு உதவுகின்றன.கண் தசைகளில் பிரச்சனை உள்ளவர்களுக்கு, ப்ளோபியா, தலைவலி, படிப்பதில் சிரமம் போன்ற நோய்கள் ஏற்படலாம். இந்நிலையில் இதுபோன்ற கண் தசை நோய்களுக்கான சிறந்த பயிற்சிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதற்கு முன்னதாக ஒளிவிலகல் பிழைகள் என அழைக்கப்படும் ஆஸ்டிஜிமாடிசம், கிட்டப்பார்வை அல்லது ஹைபரோபியா போன்ற கண் பார்வை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த வகை கண் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்காது. எனவே கண்மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.
அதே போல மங்கலான பார்வை, கண் திரிபு, டிஸ்லெக்ஸியா, கண் சிமிட்டுதல், கண் தசைகள் செயலிழந்திருப்பது போன்ற சில கண் நோய்களுக்கு கண் பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். பார்வையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் உதவும் சில கண் தசை பயிற்சிகளை தற்போது காணலாம்.
பென்சில் புஷ்அப்ஸ் : பென்சில் புஷ்-அப்கள் அடிப்படையில் கண்கள் ஒன்றையொன்று நோக்கி நகர்த்த அல்லது அருகில் உள்ள பொருளைப் பார்க்கும்போது ஒன்றிணைக்க பயிற்சியளிக்கப்படும் செயல்முறையாகும். பென்சிலை மெதுவாக மூக்கின் அருகே நகர்த்தி, நுனியை ஒரே ஃபோகஸில் வைத்துப் பயிற்சியை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
எண் 8 படத்தை பார்த்தல் : எண் 8 படத்தை பார்த்தல், மூலம் கண் பார்வையை மேம்படுத்தவும், கண் தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தப் பயிற்சியில், ஒருவர் உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டும், அவர்களுக்கு முன்னால் 10 அடிக்கு முன்னால் தரையில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, படம் 8-ஐ கற்பனை செய்து அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். பின்னர் 30 வினாடிகள் கண்காணித்து, பின்னர் திசையை மாற்ற வேண்டும்.
கண்களை உருட்டுதல் : கண்களை உருட்டுதல் என்பது கண் அழுத்தத்தை போக்க உதவும் ஒரு பயிற்சியாகும். கண் அழுத்தத்திலிருந்து எளிதாக நிவாரணம் பெற, ஒருவர் உட்கார்ந்தவாறு , தலையை அசைக்காமல் கண்களை வலப்புறம், பின்னர் மேல்நோக்கியும் , பின்னர் இடது புறம் மற்றும் கீழே தரையில் பார்த்து, இந்த பயிற்சியை செய்யலாம்.
20-20-20 கண் தசைப்பயிற்சி : 20-20-20 விதி என்பது ஒரு எளிய கண் தசைப்பயிற்சி நுட்பமாகும். 20-20-20 கண் தசைப்பயிற்சி மூலம், கண் அழுத்தத்தைத் தடுக்கலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்து, உங்களிடமிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை தோராயமாக 20 வினாடிகளுக்குப் பாருங்கள். குறிப்பாக அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி, போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பயிற்சி கண் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
உள்ளங்கை பயிற்சி : உள்ளங்கை பயிற்சி கண் சோர்வைப் போக்க உதவும். முதலில், உங்கள் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று தேய்த்து அவற்றை உங்கள் கண்களுக்கு மேல் வைக்கவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்யலாம்.
ப்ரோக் ஸ்ட்ரிங் (Brock String) : ப்ரோக் ஸ்ட்ரிங் என்பது காட்சி அமைப்பை பயிற்றுவிக்க செய்யப்படும் ஒரு பிரபலமான பார்வை சிகிச்சையாகும். ஒரு நூலை எடுத்து ஒரு புறம் வளையத்தை கட்டி, 3 அல்லது 4 மணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் கோர்த்து கொள்ளவும், இப்போது அதன் மறு முனையிலும் வளையத்தை கட்டி கதவு கைப்பிடி அல்லது ஜன்னல் கம்பிகளில் கட்டிவிட வேண்டும். இப்போது அடுத்த முனை வளையத்தை மூக்கின் அருகில் வைத்து உற்றுநோக்குதல் மூலம், கண்களை சீரமைக்கும் பயிற்சியாக மட்டும் அல்லாது கவனம் செலுத்துதலுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.
Click here for more Health Tip
No comments:
Post a Comment