எனவேதான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் (CSIR) பெருங்காயத்தை இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயிரிட திட்டமிட்டுள்ளது. இது வெற்றிகரமாக நல்ல விளைச்சலை அளித்தது எனில் இதனால் பெருங்காய இறக்குமதிக்கு இந்தியா செலவு செய்யும் 900 கோடி (வருடத்திற்கு) சேமிக்க முடியுமாம்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. பெருங்காயம் இந்திய சமையலறையை ஆக்கிரமித்ததற்கு அதன் மணம் மட்டுமல்ல நன்மைகளும்தான் காரணம். குறிப்பாக அதில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலும், நோய் அழற்சியை எதிர்த்து போராடும் குணமும் அதிகமாக உள்ளன.
பெருங்காயத் தண்ணீர் எப்படி உருவாக்க வேண்டும்..? ஒரு கிளாஸ் வெதுவெதுப்பாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் அதை பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இப்படி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? ( குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் கலந்து குடிக்க பிடிக்கவில்லை எனில் மோரில் கலந்து குடிக்கலாம்.)
செரிமானத்தை தூண்டுகிறது : உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருப்பின் பெருங்காயத் தண்ணீர் பலன் தரும். இது உடலின் செரிமானத்தை பாதிக்கும் நச்சுக்கள் இருப்பின் அதை நீக்கி செரிமான அமைப்பை சீராக செயலாற்ற உதவுகிறது. அதோடு வயிற்றின் பிஹெச் அளவை சமன் செய்வதால் குடல் இயக்கமும் சீராக இருக்கும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது : பெருங்காய தண்ணீர் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எனவே தேவையற்ற கொழுப்பு படிவதை தடுத்து உடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது.
சளிக்கு நல்லது : உங்களுக்கு சளி இருப்பின் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடிப்பது உங்கள் மூச்சுக்குழாயில் உள்ள தொந்தரவுகளை சரி செய்து சளியை விரட்டுகிறது. இதனால் மூக்கடைப்பு , இருமல் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தலைவலியை குறைக்கும் : அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்காயத்தில் இருப்பதால் உங்கள் தலைவலி பிரச்சனைக்கு பலன் தரும். அதாவது இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து தலைவலி தூண்டுதலை தடுக்கிறது.
மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் : நீங்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் ஒரு முறை மாதவிடாய் சமயத்தில் வெதுவெதுப்பான பெருங்காயத்தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்துப்பாருங்கள். இது மாதவிடாயின் போது ஏற்படும் அடி வயிற்று வலிக்கு நல்ல ரிலீஃப் தரும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது : பெருங்காயம் கணைய செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்ததில் சர்க்கரை அளவை தானாகவே குறைத்துவிடும்.
உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்துகிறது : இரத்த உறைதல் பிரச்சனைக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக இருக்கும். அதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கும். இவை சரியாக நிகழ்ந்தாலே இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
No comments:
Post a Comment