உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் 7 உணவுகள்..! - Agri Info

Adding Green to your Life

March 29, 2023

உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் 7 உணவுகள்..!

 நமது உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது இரும்பு சத்து ஆகும். முக்கியமாக நமது ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கும், உடல் இயக்கங்கள் சரியாக வேலை செய்வதற்கும் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.

இறைச்சி மற்றும் மீன் : இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினசரி நாம் உண்ணும் உணவில் மீன் மற்றும் இறைச்சியா ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை நம் பெற முடியும்.

ப்ரோக்கோலி : ஒரு கப் ப்ரோக்கோலி கிட்டத்தட்ட ஒரு நபருக்கு தேவையான அளவில் ஆறு சதவீதம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே நமது தினசரி உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான இரும்புச்சத்தை நாம் பெற முடியும்.

கீரை : ஒரு கப் கீரையில் கிட்டத்தட்ட 3.72mg அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கீரை வகைகளில் பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே தினசரி உணவில் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

செலரி : செலரியில் இரும்பு சத்து, ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டிய சத்துக்கள் ஆகும்.

பூசணி விதைகள் : நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிப்பதில் பூசணி விதைகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவற்றை நாம் நொறுக்கு தீனியாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

மாதுளம்பழம் : இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாதுளம் பழத்தின் விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளும் அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா : சோயாவில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது. ஒரு கப் சோயா பீனை நாம் எடுத்துக் கொண்டால் அதில் 9.9 mg அளவிலான இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும் ? நம் உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு நமது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது அவசியமாகும். சுருக்கமாக எச்பி என அழைக்கப்படும் இந்த ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு குறைவாக இருக்கும் போது நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடைப்படும். இதன் காரணமாக அந்த நபர் மிகவும் சோர்வாகவும் வலுவிழந்தும் காணப்படுவார்.

ஹீமோகுளோபின் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஒரு வளர்ந்த ஆண் மகனுக்கு 14 - 15g/dl அளவும், பெண்களுக்கு 12-16 g/dl அளவும் ஹீமோகுளோபின் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதற்கான அறிகுறிகள் என்ன? ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மை, சருமம் மஞ்சள் நிறமாதல், அசாதாரமான இதயத்துடிப்பு, மயக்கம், நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment