Post Office Jobs: தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (staff car Driver) பணியிடங்களுக்கு விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவி: கார் ஓட்டுநர் (staff car Driver general central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts)
காலியிடங்கள் எண்ணிக்கை: 58
கல்வித் தகுதி: இந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும். மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
சம்பளம்: இதற்கான சம்பள நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஆகும் (Level 2 in the pay matrix)
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test) பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் tamilnadupost.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும்.
No comments:
Post a Comment