காஃபி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பானம். காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால் தான் அன்றைய நாளே சிலருக்கு துவங்கும். காஃபி என்பது ஆற்றலை வழங்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. புத்துணர்ச்சி தருவதாலேயே காஃபி குடிக்க பலர் விரும்புகிறார்கள். காஃபி பிரியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் காஃபி குடிப்பார்கள். இருப்பினும், உங்கள் காஃபி நுகர்வில் கவனம் செலுத்தாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு அதிகமான கப் காஃபி குடிப்பதால் உங்கள் உடலில் காஃபின் ஏற்றப்படுகிறது. அதிகப்படியான காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்படியானால் நீங்கள் தினமும் எவ்வளவு காஃபி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காஃபி குடிக்க சிறந்த நேரம் எது?
காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நாள் முழுவதும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. காரணம், உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும். இது ஒருவரை விழித்திருக்கவும் ஆற்றல் மிக்கதாகவும் வைத்திருக்கும் மூலக்கூறாக அறியப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும்.
கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் காஃபி குடித்தால், அது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும். எனவே, காஃபி குடிக்க விரும்புபவர்கள் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கவும். அதிலும், காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் காஃபி குடிக்கும்போது, குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் காஃபி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது. பின்னர் பல மணிநேரங்களுக்கு உடலில் காஃபின் அளவு உயர்ந்தே காணப்படும்.
எனவே, ஒவ்வொரு முறையும் காஃபி குடிக்கும் போது 2 அவுன்ஸ் அளவு குடிப்பதே சிறந்தது. அதேபோல, நீங்கள் மாலையில் எடுத்துக்கொள்ளும் காஃபியை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வதால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment