Search

இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

 காய்ச்சல் அல்லது தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்தால் அதை பற்றிய வதந்திகளும் பொய்யான சிகிச்சை முறைகளும் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது தற்போது பரவி வரும் இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து மக்களிடையே தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது தற்போது பரவி வரும் இன்ஃபுளூவன்சா A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இன்ஃபுளூவன்சா தொற்று காய்ச்சல் சாதாரண பருவகால தொற்று தான் என்றாலும் சற்று வீரியத்துடன் இந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முறையற்ற மருத்துவ குறிப்புகளும் வாட்சப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக தொற்றுநோய் தடுப்பு மருத்துவரான மதுமிதா அவர்கள் கூறியதாவது,

இந்த இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது . ஆனால் சிலர் நோய் தொற்று தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வதந்தியால் வைரஸ் தொற்று மருந்திற்கு மாற்றாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் நோய் தொற்றிற்கு தொடர்பில்லாத ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துவருகின்றனர்.

மேலும் மருத்துவ ஆலோசனை இன்றி ஆன்டிபயோடிக் மற்றும் காய்ச்சல் மருந்துகளை உட்கொண்டால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி தற்போது பரவிவரும் இன்ஃபுளுவன்சா தொற்று மிக சாதாரணமான தொற்று என்றுகூறும் மருத்துவத்துறை அதிகாரிகள் முககவசம் அணிவது தனிநபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை களை கடைபிடித்தாலே இந்த தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

0 Comments:

Post a Comment