Search

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வானவர்கள் செய்ய வேண்டியது என்ன?

 

India post gds result 2023:  நாடு  முழுவதும் உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் IndiaPost GDS Online என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதிகாரிகளின் எந்தவித நேரடித் தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி? 

தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்;

short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதனை , பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள Divisional head முன்னிலையில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment