கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னதாக பெரும்பாலானவர்கள் ஒர்க் ப்ரம் ஹோம் என வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் சரிசமமாக உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போதே நமக்கு கழுத்து மற்றும் முதுகு வலி அதிகளவில் ஏற்படும். இந்நிலையில் வீட்டில் நினைத்த இடத்தில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகரிக்கிறது. இதனால் தான் spinal எனப்படும் முதுகெலும்பில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது என்பதால் அதிக வலி ஏற்படுகிறது.
பொதுவாக பெண்களுக்குத் தான் அதிகளவில் முதுகு வலி ஏற்படுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் பல சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். இனி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணமுடியும். குறிப்பாக ஹெர்னியேட்டட் டிஸ்க், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் அல்லது தசைப்பிடிப்பு போன்ற பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படுகிறது.
ஆரோக்கியமான முறையில் முதுகு வலி வராமல் பராமரிக்க உதவும் வழிமுறைகள்: உடற்பயிற்சி செய்தல் : ஆரோக்கியமான முறையில் முதுகு வலியை சரிசெய்ய வேண்டும் என்றால், தினமும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் உடற்பயிற்சியைச் செய்யும் போது முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு உடல் சீராக இயங்க உதவியாக உள்ளது. எனவே நடைபயிற்சி, நீச்சல் மற்றும் யோகா போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டாலே முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்
நேராக அமர்ந்திருத்தல் : நாம் எப்போதும்,எங்கு உட்கார்ந்திருந்தாலும் நேராக உட்கார வேண்டும். இதோடு தூங்கும் போதும் எவ்வித இடையூறு இல்லாமல் தூங்கவேண்டும். இல்லையென்றால் நமது முதுகுத்தண்டிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதோடு முதுகுவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே தான் நாம் எந்த செயல்பாடுகள் செய்தாலும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நிச்சயம் வலி ஏற்படும். இருந்தப் போதும் இதைத் தொடர்ச்சியாக செய்ய முயலுங்கள்.
முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்
முதுகெலும்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தூங்கும் போது, முதுகில் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைக்க முயற்சி செய்யவும். கழுத்து வலி அதிகமாக இருந்தால் கழுத்து குஷன் பயன்படுத்துங்கள். இதோடு உங்களது கழுத்து வலிக்காமல் இருக்கும அளவிற்கு தலையணைகளை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.
தரமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் : சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தூக்கமின்மை முதுகு வலி மற்றும் அதிக கழுத்து வலியையும் நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-9 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு உங்களது தசைகளில் பதற்றத்தைக் குறைத்து முதுகுவலியையும் குணப்படுத்துகிறது. எனவே நல்ல தூக்கத்தை நீங்கள் கடைப்பிடிப்பதோடு,மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...
No comments:
Post a Comment