கைக்குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயதினரும் நல்ல வாய்வழி சுகாதாரம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். எனினும் ஓரல் கேர் எனப்படும் வாய் சுகாதாரத்திற்கான அணுகுமுறை ஒரு நபரின் வயது மற்றும் வளர்ச்சி நிலையைப் பொறுத்து மாறுபடும்.
ஓரல் கேர்-ஐ பொறுத்தவரை கைக்குழந்தைகள், குழந்தைகள், டீனேஜர்ஸ், அடல்ட்ஸ் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் அவரவர் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தனித்துவமான கவனிப்புகள் தேவைப்படுகின்றன. நம்முடைய பற்கள் நம்மைப் போலவே பரிணாம வளர்ச்சியடையும் என்பதால் அதற்கேற்ப வாய்வழி பராமரிப்பு வழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாய்வழி பராமரிப்பிற்கான பல அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இதனை சரியாக புரிந்து கொண்டு சில பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை நீங்கள் பராமரிக்கலாம். இதற்கு உதவும் வகையில் கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலான வாய்வழி பராமரிப்பு குறிப்புகளை பிரபல ஓரல் கேர் நிபுணர் வீரேன் குல்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கைக்குழந்தைகள் (0-12 மாதங்கள் வரை) :
- ஒவ்வொரு முறையும் உங்கள் கைக்குழந்தைக்கு உணவளித்த பின் அதன் ஈறுகளை சுத்தமான, ஈரமான மஸ்லின் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
- உங்கள் குழந்தையை ஒரு பாட்டில் அல்லது சிப்பி கப்புடன் (sippy cups) படுக்க வைப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் இது பல் சிதைவுக்கு வழிவகுக்கும்.
- உங்கள் குழந்தைக்கு பற்கள் வளர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் ஈறுகள் மற்றும் பற்களை சுத்தம் செய்ய இன்ஃபேன்ட் பிரஷ் அல்லது ஃபிங்கர் பிரஷ்களை பயன்படுத்தலாம்.
- 6-36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு xylitol-லுடன் ஃப்ளோரைடு இல்லாத டூத் பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதால் கேவிட்டிஸ் அதாவது பற்சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.
குழந்தைகள் (3-10 வயது வரை) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு நாளொன்றுக்கு 2 முறை பல்லை பிரஷ் செய்ய உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும்.
- பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் Plaque-ஐ அகற்ற உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை Dental floss-ஐ பயன்படுத்த உதவுங்கள்.
- உங்கள் குழந்தை ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை கொண்டிருக்க ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை உள்ளடக்கிய ஒரு சீரான டயட்டை பின்பற்ற செய்யவும்.
- உங்கள் குழந்தையை வழக்கமான பரிசோதனைகளுக்காக மற்றும் சுத்தம் செய்ய பல் மருத்துவரிடம் வழக்கமான முறையில் அழைத்து செல்லுங்கள்.
இளம் பருவம் (10-15 வயது வரை) :
- உங்கள் இளம்பருவ குழந்தைகளை தினசரி தவறாமல் 2 முறை பிரஷ் செய்ய மற்றும் ஃப்ளோஸ் செய்ய ஊக்குவிக்கவும்.
- பற்களை சேதப்படுத்தும் சர்க்கரை மற்றும் அசிடிக் உணவுகள் (acidic foods) மற்றும் பானங்களை ஏன் தவிக்க வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்.
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டைதொடர்ந்து பயன்படுத்துவது எனாமலை (enamel) வலுப்படுத்த உதவும்.
- Xylitol அடங்கிய டூத்பேஸ்ட்டானது கேவிட்டீஸ்களை தடுக்க உதவுகிறது.
அடல்ட்ஸ் (18-64 வயது வரை) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். தவிர ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் உணவுகள் தங்காதவாறு உங்கள் பற்களை மற்றும் பல் இடுக்குகளை நன்கு க்ளீன் செய்ய வேண்டும்.
- பற்சிதைவு மற்றும் பற்களின் மேற்பரப்பில் அரிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை, அமில உணவுகள் மற்றும் பானங்களை எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
- வழக்கமான அடிப்படையில் பரிசோதனைகள் செய்து கொள்ள மற்றும் பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை பார்க்கவும். தவிர மேலும் உங்கள் வாய் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு இருக்கும் கவலைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும்.
முதியவர்கள் (65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். தவிர சாப்பிடும் உணவுகள் பற்களுக்கு இடையில் தங்காதவாறு பற்களை தினசரி இன்டர்டென்டல் க்ளீனிங் செய்ய வேண்டும்.
- உங்கள் வாயை ஈரப்பதமாக வைத்திருக்க மற்றும் வாய் வறட்சியை தடுக்கவும் எப்போதும் ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை சந்திக்க நேரிடலாம்.
- உங்கள் மருந்து முறைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உங்கள் பல் மருத்துவரிடம் பேசி சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் சில மருந்துகள் வாய் வறட்சி அல்லது பிற வாய் சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- பல் ஆரோக்கியம், பல் இழப்பு போன்ற முதுமை சார்ந்த ஓரல் கேர் பற்றிய கவலைகளை உங்கள் பல் மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெறுங்கள்.
- நீங்கள் பல் செட் போன்ற செயற்கை பற்களை பயனப்டுத்தினால் அதன் மீது plaque படிவத்தை குறைக்க செயற்கை பற்களுக்காக தயாரிக்கப்படும் டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ்ஷை பயன்படுத்தி சுத்தம் செய்வது முக்கியம்.
No comments:
Post a Comment