ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு அவரின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். செரிமான மண்டலத்தின் முதல் பகுதியாகவும், முக்கிய பகுதியாகவும் இருப்பது வாய்ப்பகுதி. வாயில் உள்ள பற்கள் மற்றும் ஈறுகள் தான் நாம் உண்ணும் உணவை அரைத்து செரிப்பதற்கு ஏதுவாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையெனில் அதனால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகக்கூடும்.
பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒரு சரியான உணவு பழக்கத்தை மேற்கொண்டாலே பல் சொத்தை ஈறுகளில் வீக்கம் போன்ற பல்வேறு வித பிரச்னைகள் ஏற்படாமல் நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். எனவே நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில குறிப்பிட்ட உணவு வகைகளை பற்றி இப்போது பார்ப்போம்
பால், மோர் மற்றும் சீஸ் : சிகாகோ பல்கலைக்கழக அறிக்கையின் படி பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்திருப்பதற்கு கால்சியம் மற்றும் புரோட்டின் ஆகியவை முக்கியமானது. எனவே உங்களது தினசரி உணவில் பால், மோர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சீஸில் அடங்கியுள்ள பாஸ்பேட் நமது பற்களின் பி எச் (PH) அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் நமது வாயில் எச்சில் சரியாக சுரப்பதற்கும் பாஸ்பேட் தேவைப்படுகிறது. இதை தவிர மோரில் உள்ள ப்ரோபயோடிக் வாயில் அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.
தண்ணீர் : நமது உடலின் 60 சதவீதம் நீரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்குமே தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். முக்கியமாக ஃப்ளூரைடு கலந்துள்ள தண்ணீரை நாம் குடிக்கும் போது அவை பற்களுக்கு மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.
உலர் பழங்கள் : டிரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வது நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அது தவிர நட்ஸ்களில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அடங்கியுள்ளன இவை அனைத்துமே பல் சொத்தை ஏற்படுவதை தடுப்பதுடன் பாக்டீரியாவோடு போராட உதவுகிறது. குறிப்பாக வைட்டமின் டி ஆனது இவர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கக்கூடியது. இவை பாதாமில் அதிகம் காணப்படுகின்றன.
மீன் : மீன்களில் அடங்கியுள்ள அதிக புரதச் சத்துக்களும் வேறு பல ஊட்டச் சத்துக்களும் பற்களுக்கு வலிமையை அளித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் வாயில் எச்சில் சுரப்பதை அதிகரித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
No comments:
Post a Comment