இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், Unemployed Youth Employment Generation Programme (UYEGP) என்ற திட்டம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாகுவதற்கம் உதவக்கூடிய திட்டமாக திகழ்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் மட்டும் 2,500க்கு மேற்பட்டோருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில், சுமார் 20 கோடி ரூபாய் மானிய நிதியாக விடுவிக்கப்படித்திருக்கிறது. எனவே, வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஏதேனும் சுய தொழில் தொடங்க விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
யார் விண்ணப்பிக்க முடியும்:
திட்டம் | வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme) |
யார் விண்ணப்பிக்கலாம் | குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் |
வயது வரம்பு | பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 18 -35 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஏனையோர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும் |
குடும்ப ஆண்டு வருமானம் | சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு தகுதி பெறுவர் |
என்ன திட்டம் இது? | இளைஞர்கள் சுயமாக தொழில் தொகை கடனுதவி வழங்கப்படுகிறது.உற்பத்தித் துறையின் (Manufacturing) கீழ் ரூ. 15 லட்சமும், சேவைகள் (Service) மற்றும் வணிகப் பிரிவில் (Trading) ரூ. 5 லட்சமும் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். |
கடன் வழங்குவது யார்? | வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் |
என்ன சலுகை? | திட்ட மதிப்பீட்டில் 25% (அதிக பட்சம் ரூ 2.5 லட்சம்) அரசு மானியமாக வழங்குகிறது. |
சொத்து ஜாமீன் தேவையா | ஆர்பிஐ வங்கியின் வழிகாட்டுதல் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டத்திற்கு சொத்து அடமான வைக்கத் தேவையில்லை. |
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம், தமிழ்நாடு அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கோரப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து இணைய வழியில் அனுப்பி வைக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களை UYEGP திட்ட நேர்காணல் குழு தேர்வு செய்யும். அந்தந்த மாவட்ட தொழில் மைய மண்டல இயக்குனர் இந்த குழுவின் தலைவராக இருப்பார். இந்த தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியால் லோன் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பித்தார்களுக்கு, அரசு மானியம் ரூ. 2.5 லட்சம் (அதிகபட்சம்மாக) விடுவிக்கப்படும். இந்த திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை அணுகலாம்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment