Search

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...!

 நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுதன்மையை நீக்கி மருந்துகளை வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தசைகள் கட்டமைத்தல், தொற்று நோய்களை எதிர்த்து போராடும் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்யும் பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.

ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் என்பது மனித உடலின் கல்லீரல் திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது ஏற்படும் ஒரு நோயாகும். இது உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கி, தொடர்ச்சியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உறுப்பு நிரந்தரமாக சேதமடைந்து கல்லீரல் புற்றுநோய் அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களுக்குத் தேவையான எச்சரிக்கை அறிகுறிகள், வகைகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்...

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களின் வகைகள்:

”ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ்” இந்த நோய் சிரோசிஸ் என்றும் அழைக்கப்படும். இரண்டு வகையான ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் உள்ளன. இதில் வகை 1 பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாகும். 2ம் வகை குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அவை முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) மற்றும் முதன்மை ஸ்க்லரோசிங் கோலாங்கிடிஸ் (PSC) ஆகியன.

முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) கல்லீரலின் செயல்பாட்டைத் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள பித்த நாளம் தொடர்பான பிரச்சனையாகும். இது ஒரு நாள்பட்ட அழற்சியாகும். இந்த வகை காலப்போக்கில் வடுக்கள் மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நோய் கல்லீரலின் பித்த நாளத்தில் சேதத்தை ஏற்படுத்துகிறது, உணவு செரிமானத்திற்கு தேவையான பித்த சாற்றை எடுத்துச் செல்லும் சிறிய குழாய்கள் விரைவில் வீக்கமடைந்து இறுதியில் நிரந்தரமாக சேதமடைகின்றன.

அறிகுறிகள்:

  • உடல் சோர்வு
  • வயிற்று அசௌகரியம்
  • மஞ்சள் காமாலை
  • கல்லீரல் வீக்கம்
  • தோல் தடிப்புகள்
  • மூட்டு வலிகள்
  • கால்கள், கணுக்கால் வீக்கம் (எடிமா)
  • அதிக கொழுப்புச்ச்த்து
  • எடை இழப்பு

ஆட்டோ இம்யூன் கல்லீரலுக்கான சிகிச்சை ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வேறுபடலாம். எனவே நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் அல்லது கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் கல்லீரல் அதிக பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். ஆனால் நோய் தாக்கம் முற்றி உறுப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் போது, ​​மருத்துவர்களின் அறிவுரையின்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment