சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தும் எடை குறையவில்லையே என கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்வார்கள். அந்த வகையில் இரவில் நீங்கள் செய்யும் இந்த பழக்கங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
தாமதமாக உண்பது : இரவு தாமதமாக உண்பது அதிகமாக சாப்பிடத் தூண்டும். அதேபோல் செரிமானமும் பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுக்கு சீக்கிரம் சாப்பிடுவதே நல்லது.
சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.
சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.
சாப்பிட்டதும் உறக்கம் : சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கும். எனவே குறைந்தது 20 - 30 நிமிட இடைவேளை இருக்க வேண்டும். அந்த இடைவேளையில் அப்படியே உட்காராமல் நடப்பது போன்ற எளிய பயிற்சி மேற்கொள்ளலாம். இதை வீட்டிற்குள்ளேயும் செய்யலாம்.
இனிப்பு உண்பது : சாப்பிட்ட பின்பு சாக்லெட், பிஸ்கெட் , ஸ்வீட் என ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடைக்கு வழி வகுக்கும். இரவு உணவுக்குப் பின் பசித்தால் பாதாம், முந்திரி போன்ற ஊட்டச்சத்தான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
குளிர்ச்சி : உடல் குளுமைக்கும் செரிமானத்திற்குமே தொடர்பு உண்டு. எனவே இரவு தூங்கும்போது உடலைக் குளுமைப்படுத்துவதாலும் எடை அதிகரிப்பைக் குறைக்கலாம். ஏ.சி இருந்தால் உடல் சூட்டை தனிக்க அளவைக் குறைத்து வையுங்கள்.
0 Comments:
Post a Comment